SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் தாயை கொன்ற இந்திய வாலிபர் கைது

2017-03-21@ 01:06:09

வாஷிங்டன்: அமெரிக்காவில் தாயை கொலை செய்த இந்திய வம்சாவளி வாலிபரை ஒராண்டுக்கு பிறகு அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் நளினி டெல்லப்ரோலு (51) தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் டுகே மெடிக்கல் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 2015 டிசம்பர் 17ம் தேதி தனது வீட்டின் வாகன ஷெட்டில் தலையில் பாலித்தீன் கவர் போடப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அன்று அவரது கணவர் வியாபார விஷயமாக வெளியூர் சென்று இருந்தார்.பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த நளினியின் 16 வயது மகன் அர்னவ் உப்பளபடி தனது தாய் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் நளினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனையில் நளினி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், கழுத்தை நெரித்து கொலை செய்வதற்கு முன்பு அவர் தாக்கப்பட்டதும் உறுதியானது. இதனை தொடர்ந்து நளினி கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொலை நடந்த அன்று வீட்டின் கதவுகளோ, பொருட்களோ உடைக்கப்படவில்லை. இதனால் அவரது மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில், கொலை நடந்து சுமார் ஒரு ஆண்டு கழித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று நளினியை கொலை செய்ததாக அவரது மகன் அர்னவ் உப்பளபடியை போலீசார் கைது செய்தனர்.  நளினி டெல்லப்ரோலு தனது உழைப்பை எல்லாம் தனது குழந்தைகளுக்காக செலவிட்டவர். அப்படிபட்டவரை அவரது மகனே கொலை செய்திருப்பது அந்த பகுதி இந்திய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.எதற்காக இந்த கொலை நடந்தது என்ற விவரங்களும் சரியாக தெரியவில்லை.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2017

    26-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • skjimBURNdisease26AGE

    பிலிப்பைன்சில் அரிய வகை தோல் நோயால் முதியவர் போல் தோற்றமளிக்கும் 26 வயது இளைஞர்

  • 17THmonthTODDLERdrinMILK

    மத்திய பிரதேசத்தில் தாய் இறந்தது அறியாமல் தாய்ப்பால் அருந்திய 17 மாத குழந்தை

  • gasCYLINDERbrustIN

    காஸ் சிலிண்டர் ஆப் செய்யாமல் சென்றதால் விபரீதம் செல்போன் கதிர்வீச்சால் சிலிண்டர் வெடித்து பெண் சாவு