SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர்க்குற்ற விசாரணை அறிக்கை இலங்கைக்கு அவகாசம் விக்னேஸ்வரன் எதிர்ப்பு

2017-03-21@ 01:06:08

கொழும்பு: போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இலங்கைக்கு 2 ஆண்டு கூடுதல் அவகாசம் அளிக்க வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இலங்கை உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை இலங்கை அரசு தாக்கல் செய்ய, 2 அவகாசம் அளிப்பது தொடர்பான தீர்மானம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நாளை கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இலங்கை அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது என்பதை ஐநா முதலில் ஆராய வேண்டும்.

 இலங்கை அரசு எதுவும் செய்யாத நிலையில், சில அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பது என்னைப் பொறுத்தவரையில் தவறு. போரின்போது காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலையும் இந்த அரசு இதுவரை வெளியிடவில்லை. ராணுவத்தினரை பாதுகாக்க வேண்டும் என்ற மனப்போக்கிலேயே இலங்கை அரசு இருக்கிறது’’ என குற்றம்சாட்டி உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2018

    24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Two_wheeler_launch

    ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானிய விலை இரு சக்கர வாகனங்கள்

  • amman_murugan123

    மாசிமாத பிரம்மோற்சவ விழா: முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் நடைபெற்ற வீதி உலா காட்சிகள்!

  • hyper_dubai123

    12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்

  • jakto_jiyo11

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X