SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய குற்றப்பிரிவில் வழக்குகள் நிலுவை விவகாரம் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆஜராக சம்மன் : ஐகோர்ட் எச்சரிக்கை

2017-03-21@ 01:00:22

சென்னை : சென்னையில் 2016ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் நடந்த ஒரு வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, மத்திய குற்றப்பிரிவில் 2011ம் ஆண்டு  வரை பல வழக்குகள் முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலுவை வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி எஸ். வைத்தியநாதன், நிலுவையில் உள்ள கொடுங் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் முடிக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு டிசம்பர் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காவல் ஆணையர் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.   
      
உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிவடைந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், நேற்று போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என கூறி வழக்கு பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில்,  இந்த வழக்கு நேற்று  நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது   அரசு  வழக்கறிஞர் கோவிந்தராஜ் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தற்போது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதற்காக வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

அப்போது இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நாங்கள் சொன்ன காலகெடுபடி டிசம்பர் மாதம்  அறிக்கை தாக்கல் செய்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக அவசர கதியில் போலீசார்  அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்றுகொள்ளமுடியாது. எனவே, அவர் இது தொடர்பாக கண்டிப்பாக வரும் 27ம் தேதி நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன் வழக்கை வருகிற 27ம் தேதிக்கு  ஒத்தி வைத்தார்.

வேறு வழக்கில் ஆ    ஜராவதில் விலக்கு


சென்னை அடுத்த ஈச்சம்பாக்கம் கவுன்சிலருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுக்கு பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதை அமல்படுத்தாத ஜார்ஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து காவல் துறை ஆணையர் ஜார்ஜ் சார்பில் வக்கீல் ராஜசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், டீக்காராமன் அடங்கிய முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலீஸ் கமிஷனர் சார்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி, பொன்.தங்கவேலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், மேலும் போலீசார் அடிக்கடி அவர் வீட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுகொண்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் தற்போது கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

  • SYRGERYrecovryyyBRAINN

    அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

  • aadi_velli111

    ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்