SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானம் : நாளை மறுநாள் வாக்கெடுப்பு

2017-03-21@ 00:19:47

சென்னை : சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானம் மீது வரும் 23ம் தேதி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மீது கடந்த மாதம் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அன்றைய தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், எண்ணிக்கை அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டியது. அது மட்டுமல்லாமல், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்க கோரும் கடிதத்தை, மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி சபாநாயகர் தனபால் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் கொடுத்தார். சட்டப்பேரவை விதி 68ன்படி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுத்த, 14 நாட்களுக்கு பிறகு சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கடிதம் கொடுத்து நாளையுடன் 14 நாள் முடிகிறது. இதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இதுபற்றி கடந்த 16ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், இந்த கூட்டத்தொடரிலேயே இந்த பிரச்னை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். அதன்படி வருகிற 23ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்பு எடுத்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலக உயர் அதிகாரி நேற்று தெரிவித்தார்.

அன்றைய தினம் இந்த பிரச்னை விவாதத்துக்கு வரும்போது சபாநாயகர் தனபால், சபையை நடத்த மாட்டார். அவருக்கு பதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, சபையை நடத்துவார். விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாக்கெடுப்பில் அன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் எம்எல்ஏக்களில் சரிபாதிக்கு மேல் வாக்குபெறாவிட்டால், சபாநாயகர் பதவியை தனபால் இழக்க நேரிடும். இது முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தும். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது, தனபாலுக்கு எதிராக வாக்களிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விதியில் கூறியிருப்பது என்ன?

தமிழக சட்டசபை விதி 68ல் கூறப்பட்டிருப்பதாவது: சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசமைப்பு சட்டத்தின் 179வது பிரிவு (சி) உட்பிரிவின்படி, தனித் தீர்மானம் கொடுக்க உறுப்பினர் எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் சட்டசபை செயலாளருக்கு 14 நாட்களுக்கு முன்னறிவிப்புடன் கொடுக்க வேண்டும். அதன் நகலை சபாநாயகருக்கும் கொடுக்க வேண்டும். தனித் தீர்மானத்தை முன்மொழிய இருக்கும் எண்ணம் பற்றி செயலாளருக்கு குறைந்தது 14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்கப்படாவிட்டால் அதற்கான தனித் தீர்மானம் ஏதும் முன்மொழியக்கூடாது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • children_protestt11

  ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

 • 2500_type_idlyy

  உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

 • 30-03-2017

  30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • FLIHJTarestre

  செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

 • farmersSUPPORtstuMAR

  விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்