SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் 32வது நாளாக போராட்டம் நீடிப்பு

2017-03-20@ 19:59:29

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 9ம் தேதி நெடுவாசல் கிராம மக்கள் 22 நாள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடகாட்டில் இன்று 16வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் பருத்திபுஞ்சை, கூட்டான்புஞ்சை, சேர்வைக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கால்நடைகளுடன் கருப்புக்கொடி மற்றும் தங்கள் பகுதிகளில் விளைந்த வேளாண் பொருட்களை கைகளில் ஏந்தியும், மாணவ, மாணவியர் பேனா, மை, பேப்பர் போன்ற பொருட்களுடனும் பேரணியாக வந்து  கலந்துகொண்டனர்.

பெண்கள் ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கிராமமக்கள் கூறுகையில், மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.  திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பேப்பர், பேனா, மை ஆகியவற்றை அனுப்பி வைக்கப்போகிறோம். இதை வைத்தாவது திட்டத்தை தடை செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு மேலாக காடு மேடுகளாக இருந்த எங்கள் விவசாய பூமியை இன்று சமதளப்படுத்தி விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அமைத்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் எங்களை விவசாயம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் எங்கள் பகுதிக்கு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. எங்கள் உடம்பில் ஒரு துளி ரத்தம் இருக்கும் வரை இத்திட்டத்திற்கு எதிராக போராடுவோம் என்றனர்.

நல்லாண்டார்கொல்லையில் இன்று 32வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் இத்திட்டத்துக்கு எதிராக மக்கள் கோஷமிட்டனர். பின்னர் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிளான்ட்டுக்கு அருகில் ைஹட்ரோ கார்பன் கழிவுகளை கொட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் கிராமமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பொதுமக்கள் கூறும்போது, ‘ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை அகற்றவில்லை என்றால், ஹைட்ரோகார்பன் கழிவுகளை கொட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளத்திலேயே விழுந்து எங்களது உயிரை மாய்த்துக்கொள்வோம் என்றனர். திமுக எம்எல்ஏ மெய்யநாதன் கூறுகையில், நெடுவாசல் பிரச்னை குறித்து இன்றுசட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-09-2017

  27-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • DURGAPOOJA

  உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

 • RUSSIALIGHT

  ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

 • tirupatibrammorchavam2017

  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

 • NIRMALASitharaman

  டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்