SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயணிகள் வசதிக்காக ஆப் அறிமுகம் செய்கிறது ரயில்வே: டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளை பார்த்து, கேட்டு மகிழலாம்

2017-03-20@ 15:12:31

புதுடெல்லி: ரயில் பயணிகளின் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய ஆப்-ஐ ரயில்வே துறை அறிமுகம் செய்யவுள்ளது. எஃப்.எம், தொலைக்காட்சி உள்ளிட்ட சேவைகள் புதிய ஆப் மூலம் பெறமுடியும். இந்த ஆப் வடிவமைப்பதற்கான டென்டரை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இந்த ஆப் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் வழியாக, ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது.

3 ஆண்டுகளில் ரூ.2,277 கோடியும், 10 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு ரூ.20,000 கோடியும் வருமானம் கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. எஃப்.எம், தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட பாடல்களையும் ஆப்-இல் கேட்டு மகிழலாம். ரயில்வே துறை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சேவை ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-09-2017

    27-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்