SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொலை தொடர்பு சேவையில் ஒரு புதிய மைல் கல்: இணைந்தது ஐடியா-வோடஃபோன் நிறுவனம்

2017-03-20@ 14:46:45

இந்தியாவின் முக்கிய தொலை தொடர்பு சேவை நிறுவனங்களான ஐடியா, வோடஃபோன் ஆகிய இரண்டும் இணைந்து செய்லபடவுள்ளதாக அறிவித்துள்ளன. 3ஜி மற்றும் 4ஜி தொலை தொடர்பு சேவை அளிக்கும் இந்நிறுவனங்கள் இணைப்புக்கு பிறகு இநதியாவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனமாக இருக்குமென்று கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையின்படி புதிய நிறுவனத்தில் இ்ங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் நெட்வொர்க் குறிப்பிட்ட காலத்துக்கு சம அளவு பங்குகளை வைத்திருக்கும். பின்னர் 45.1% பங்குகள் வோடஃபோன் வசமிருக்கும்.

இந்த 2 நிறுவனங்களும் ஒன்றிணையும் பணி அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் என கூறப்படுகிறது. புதிய நிறுவனத்தின் தலைவராக குமார்மங்கலம் பிர்லா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு அறிவிப்பு வெளியான உடனேயே ஐடியா நிறுவனத்தின் பங்கு சுமார் 14.5% உயர்ந்தது. இந்திய தொலைத்தொடர்பு மார்க்கெட்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகப்பெரிய புறட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வோடஃபோன் இந்தியா மற்றும் ஐடியா நிறுவன இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜியோவின் இலவச சேவையால் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் ஐடியா நிறுவனமும் சரிவை சந்தித்து வந்த நிலையில் இந்த இணைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2018

    24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Two_wheeler_launch

    ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானிய விலை இரு சக்கர வாகனங்கள்

  • amman_murugan123

    மாசிமாத பிரம்மோற்சவ விழா: முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் நடைபெற்ற வீதி உலா காட்சிகள்!

  • hyper_dubai123

    12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்

  • jakto_jiyo11

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X