SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக சிட்டுக்குருவிகள் தினம் : பள்ளியையே வாழ்விடமாக மாற்றிய மாணவர்கள்

2017-03-20@ 10:06:23

காலப்போக்கில் வேகமாக அழிந்து வரும் உயிரினமான சிட்டுக்குருவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இன்று சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. விளைநிலங்களில் ரசாயன கலவையிலான பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வளரும் தானியங்களை சாப்பிடும் சிட்டுக் குருவிகள்  இறந்து விடுகின்றன. பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படும் சிட்டுக்குருவிகளால் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. மேலும் அவை இடும் முட்டைகள் உடனே உடைந்து விடுகின்றன.

நகரமயமாதல், மரங்கள் அழிப்பு, ஒலி மாசு, செல்போன்  டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு உள்ளிட்ட காரணங்களால் சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து அழிந்து வருவதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின பள்ளி மாணவர்கள் சிட்டு குருவிகளை பாதுகாக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் அருகே உள்ள தேவாலாவில் பழங்குடியின மாணவர்களுக்காக இந்த உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளுக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தை ஏற்படுத்தி, கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் பள்ளியையே சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக மாற்றியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • children_protestt11

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

  • 2500_type_idlyy

    உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

  • 30-03-2017

    30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • FLIHJTarestre

    செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

  • farmersSUPPORtstuMAR

    விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்