SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஸ்ட்லி ரேங்லரை போன்று உருமாறும் மஹிந்திரா ‘தார்’ ஜீப்

2017-03-19@ 00:03:03

கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய் விலை கொண்டது சொகுசு எஸ்யூவி மாடலான ரேங்லர் ஜீப், ஆனால் அவ்வளவு விலை கொடுத்து வாங்க  இயலாது என்பவர்களுக்காக மஹிந்திரா ‘’தார்’’ ஜீப்பை ரேங்லரைப்போன்றே மாடிஃபை செய்து தருகிறது கேரளாவை சேர்ந்த கார்  மாடிஃபிகேஷன் நிறுவனம்.ஆஃப் ரோடு டிரைவிங் மீது மோகம் கொண்டவர்களுக்கு கனவு வாகனமாக விளங்குவது ரேங்லர் ஜீப் ஆகும். இதன் விலை மிக அதிகம்  என்பதால் பலருக்கு அதனை சொந்தமாக்கிக் கொள்வது என்பது வெறும் கனவாகவே உள்ளது. அக்கனவை நனவாக்கி தருகிறார்கள் ரெட்  பாஃக்ஸ் ஆட்டோ கேர் என்ற கார் மாடிஃபிகேசன் நிறுவனத்தினர். அதுவும், வாங்கக்கூடிய விலையில். இவர்கள் உருமாற்றித்தரும் ‘தார்’ ஜீப்  தான் ரேங்லரை சொந்தமாக்க வேண்டும் என்பவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும். ரியர்வியூ கண்ணாடி, கதவுகளின் கைப்பிடி, ஃபியூயல்  டேங்கின் மூடி, பின்பக்க விளக்கு என ரேங்லர் ஜீப்பின் சில உதிரிப்பாகங்களை கொண்டு ‘’தார்’’ ஜீப்பில் மாற்றம் செய்கின்றனர். முகப்பில்  ரேங்லர் ஜீப் லோகோவைக்கூட பொருத்தி தருகின்றனர்.

ரேங்லரின் வீல், அளவில் பெரிது, ஆதலால் தாரில் உள்ள வீல்களை நீக்கிவிட்டு, அளவில் பெரிய டயர்களை இதில் பொருத்தியுள்ளனர்.  இதன் ரியர்வியூ கண்ணாடி எல்ஈடி.யுடன் கூடியது. இண்டீரியரை பொருத்தமட்டில் ரேங்லரில் உள்ள முன்பக்க சீட் போன்றே மார்க்கெட்டில்  கிடைக்கும் விலை உயர்ந்த சீட்களை கொண்டு மாற்றியுள்ளனர். பெரும்பாலான மாற்றங்களைக்கண்ட பின்னர், இது ‘’தார்’’ ஜீப் என்று  சொன்னால் யாரும் நம்புவது கடினமே! அத்தனை வேலையையும் ரூ.5 லட்சத்தில் முடித்து தருகின்றனர்.தார் ‘டே பிரேக் எடிசன்’’ என்ற  பெயரில் இதைப்போன்றே மாறுதல்களை மஹிந்திரா நிறுவனமே செய்து தருகிறது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jatayu_bird11

  200 அடி நீள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன், பறவைகள் சரணாலயம் : கேரளாவில் உருவாக்கம்

 • othigai_111sunami

  கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் அச்சம்

 • chennai_udall11

  உடல் உறுப்புதான வார விழா : உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

 • SnowfallnorthernIndia

  வட இந்தியாவில் தொடங்கியது பனிப்பொழிவு: குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீ மூட்டும் மக்கள்

 • goa_train_acc

  கோவாவில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்