SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் அறிமுகம்

2017-03-19@ 00:03:02

உலகின் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தியாவிலும் முன்னனி நிறுவனமாக விளங்குகிறது. இதன்,  ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறது. தற்போது, பாரத் ஸ்டேஜ்-4 என்ற மாசு உமிழ்வு தரச்சான்று பெற்று, புதிய  இன்ஜினுடன், புதிய ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவா 4ஜி என்பது நான்காம் தலைமுறை ஆக்டிவா என்பதனை குறிக்கும். நான்காவது முறையாக அப்கிரேடு செய்யப்பட்டு  வெளிவந்திருக்கும் புதிய ஆக்டிவா-4ஜி ஸ்கூட்டர் ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் பிஎஸ்-4 சான்று பெற்ற இன்ஜின் கொண்டு  வெளிவந்துள்ளது. இதில், புதிய ரீடிசைன் செய்யப்பட்ட முன்புற கவர் டிசைன் மற்றும் மொபைல் சார்ஜ் செய்யும் போர்ட் ஆகியவை புதிய  அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. மற்றபடி, பழைய ஆக்டிவாவில் இருக்கும் டியூப்லெஸ் டயர், சீட்டின் கீழ் உள்ள ஸ்டோரேஜ் வசதி, மற்றும்  இலகுவாக சர்வீஸ் செய்ய வசதியாக முன்புறத்தை தூக்க உதவும் CLIC மெக்கானிசம் ஆகியவை இதிலும் உள்ளது.

ஆக்டிவா 4ஜி தற்போது மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய இரண்டு புதிய கவர்சிகரமான  வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ஈக்குவலைசர் டெக்னாலஜியுடன்கூடிய ஹோண்டாவின் பிரத்யேக காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (CBS)  தரப்பட்டுள்ளது. இது, இரண்டு சக்கரங்களுக்கும் பிரேக் விசையை பிரித்து சரி சமமாக விநியோகிக்கிறது. இது, ஒரு மேம்பட்ட பிரேக்கிங்  சிஸ்டமாகும். இதில், பாரத் ஸ்டேஜ்-4 தரச்சான்று பெற்ற 109 சி.சி இகோ டெக்னாலஜி (HET) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது,  அதிகபட்சமாக 8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், AHO எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கும் இடம்பெற்றுள்ளது. ஆக்டிவாவின் புதிய நான்காம் தலைமுறை ஸ்கூட்டர் ₹50,730  (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்