SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாடா ஹெக்ஸா இனி ஆன்லைன் புக்கிங்!

2017-03-19@ 00:03:02

இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டொமொபைல் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார், சரக்கு வாகனம், பஸ், லாரி  என அனைத்து வித வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இதன் சமீபத்திய அறிமுகமான டாடா ஹெக்ஸா கார்களை வாங்க,  வாடிக்கையாளர்கள், டெஸ்ட் ட்ரைவ் செய்ய பிரத்யேக ஆன்லைன் வசதியை இந்நிறுவனம் தற்போது ஏற்படுத்தியுள்ளது.டாடாவின் பிரத்யேக இம்பேக்ட் டிசைனில் கடந்த ஜனவரி மாதம் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காரை வாங்க விரும்பும்  வாடிக்கையாளர்கள், இனி ஆன்லைனிலேயே புக்கிங் செய்துகொள்ளும் வகையில், புதிய வசதியை டாடா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.  டாடாவின் துணை நிறுவனம் ‘க்ளிக்’, இது, ஒரு மின் வணிக இணையதளமாகும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘க்ளிக்’கில் மின்சாதன  பொருள், ஆடல் அணிகலன், காலணி என பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ‘க்ளிக்’ இணையதளத்தில், ஹெக்ஸா காரை, முன்பணமாக 11,000 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதியை  ஏற்படுத்தியுள்ளது டாடா நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு ஹெக்ஸா கார், எளிமையாக சென்றடையும் வகையில் இந்த வசதியை  ஏற்படுத்தியுள்ளது டாடா நிறுவனம்.இதுகுறித்து கருத்து தெரிவித்த டாடா க்ளிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி, அஷுதோஷ் பாண்டே, ‘ஸ்டைல், சிறப்பம்சம் மற்றும்  செயல்திறன் ஆகிய கலவையால் உருவாக்கப்பட்டதே டாடா ஹெக்ஸா கார். இப்புதிய காரை ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். இந்த கார்,  வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும்’ என்றார்.

டாடா ஹெக்ஸா காரில், அடுத்த தலைமுறை 2.2 லிட்டர் வேரிகோர் 400 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது, அதிகபட்சமாக 153.6 பிஎச்பி  ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனலாகவும்  கிடைக்கிறது. டாடா ஹெக்ஸா, எக்ஸ்.இ, எக்ஸ்.எம், எக்ஸ்.டி, எக்ஸ்.எம்.ஏ, எக்ஸ்.டி.ஏ மற்றும் எக்ஸ்.டி 4X4 ஆகிய 6 வேரியண்டுகளில்  கிடைக்கிறது. இதன் விலை ₹11.99 லட்சத்தில் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) இருந்து துவங்குகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்