SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயக்குனர் செய்யாறு ரவி மாரடைப்பால் மரணம்

2017-03-12@ 00:22:31

சென்னை பிரபு நடித்த ‘தர்மசீலன்', கார்த்தி நடித்த ‘அரிச்சந்திரா', சிங்களத்தில் விரைவில் ரிலீசாக உள்ள ‘பாபநாசம்' படத்தின் ரீமேக்கான ‘தர்மயுத்தாய' ஆகிய படங்களை இயக்கியவர் செய்யாறு ரவி (54). ‘ஆனந்தம்', ‘கோபுரம்', ‘சுமங்கலி' உட்பட சில டி.வி நெடுந்தொடர்களையும் இயக்கியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பாபா ஹவுசில், நேற்று காலை டி.வி. நெடுந்தொடர் படப்பிடிப்பில் ஒரு காட்சியை ரவி இயக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரெனநெஞ்சு வலிப்பதாக கூறி, மயங்கினார். உடனே அவரை சின்மயா நகரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மரணம் அடைந்த செய்யாறு ரவிக்கு மனைவி ஜெயந்தி மற்றும் மகன், மகள் உள்ளனர். இன்று செய்யாறில் ரவியின் இறுதிச்சடங்கு நடக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்