SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வாரண்ட்

2017-03-10@ 13:00:27

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால், சென்னையை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. சர்ச்சையில் சிக்கியுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி கர்ணன் தற்போது மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், திடீரென அதே பொறுப்பிற்கு கொல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நீதிபதி கர்ணன், ஊழல் குற்றச்சாட்டு பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. மேலும் அவர் சார்பாக இவ்வழக்கில் ஆஜராக வழக்கறிஞர்களும் யாரும் நியமிக்கப்படவில்லை. முன்னதாக நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி  விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை மார்ச் மாதம் 10-ஆம் தேதியான இன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இன்றும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. அப்போது தலைமைநீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான 7 பேர் அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.   

நீதிபதிகள் எச்சரிக்கை:


நீதிபதி கர்ணனால் நியமிக்கப்படாத நிலையிலும், அவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்கள் ஆஜராகி வருகின்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதற்காக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்