SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள்

2017-03-03@ 02:31:15

திருவனந்தபுரம் : கேரள மாநிலம்  கண்ணூர் அருகே பேராவூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவியை,  மீண்டுநோக்கி செயின்ட் செபாஸ்டியன் ஆலய பாதிரியார் ராபின் (48) பலாத்காரம்  செய்ததாக தெரிகிறது. இதில் கர்ப்பம் அடைந்த மாணவி குழந்தை பெற்றதாக  கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெளிநாடு தப்பி செல்ல  திட்டமிட்டிருந்த பாதிரியார் திருச்சூர் அருகே சாலக்குடியில் கைது  செய்யப்பட்டார். இதற்கிடையே சிறுமி பலாத்கார வழக்ைக மூடி மறைத்த கிறிஸ்தவ சபைக்கு எதிராக  விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுமி பிரசவித்த விவரத்தை மூடி  மறைத்த மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை பிறந்த  2 நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு  நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களும் போலீசாரிடம்  எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன.  இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக  கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும்  வௌிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.  கடந்த இரு வருடங்களுக்கு முன்  கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் ெபண் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால்  தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை குறித்து  போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு  பாதிரியார் லட்சக்கணக்கான பணம் ெகாடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில்  குறிப்பிட்டுள்ளனர். பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு  இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி  ேதாட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட  சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக  கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார். தற்போது  அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக  உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்