SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலாத்கார வழக்கில் கைதான பாதிரியார் ஏராளமான மாணவிகளை வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளார்: மார்க்சிஸ்ட் எம்பி பகீர் குற்றச்சாட்டு

2017-03-02@ 01:37:16

திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார்  ஏராளமான மாணவிகளை பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் எம்பி.மதி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேராவூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவியை, மீண்டுநோக்கி செயின்ட் செபாஸ்டியன் ஆலய பாதிரியார் ராபின் (48) பலாத்காரம் செய்தார். இதில் மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றார். இதுதொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி பாதிரியாரை கைது செய்தனர். . இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை கான்வென்டில் இருந்து அதிரடியாக மீட்ட போலீசார், இருவரையும் கண்ணூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே பாதிரியார் ராபினிடம் போலீசார் நடத்தி விசாரணையில், ராபின் நேற்று கொச்சியில் இருந்து துபாய்க்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை தலச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிரியார் ராபினை போலீசார் கண்ணூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாதிரியார் ராபினை, பள்ளி மேலாளர் பொறுப்பில் இருந்தும், பாதிரியார் பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளதாக மானந்தவாடி சேகரம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கண்ணூர் எம்பி மதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கண்ணூர் மாவட்டத்தில் இருந்து பிளஸ்2 படித்த ஏராளமான மாணவிகளை பாதிரியார் ராபின் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த மாணவிகளின் பெற்றோரை ஏமாற்றி அவர்களை கடத்தியது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். மாணவி படித்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும்.  திருமணமாகாத சிறுமி குழந்தை பெற்ற விவரத்தை மூடி மறைத்த மருத்துவமனை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ேவண்டும்’’ என்றார்.

மருத்துவமனை விளக்கம்

மாணவி பிரசவித்த தனியார் மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவியை பரிசோதித்தபோது அவருக்கு பிரசவ வலி என தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனை பிரசவ வார்டுக்கு அனுமதித்தோம். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த மாணவி அழைத்து வந்தபோது 18 வயது ஆகிவிட்டதாக பெற்றோர் கூறினர். இதனால்தான் தாங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ப்ளஸ்

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள், பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக கடத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் 16 முதல் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். இவர்கள் பாலியல் தொழில், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கு கடத்தப்படுகிறார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்