SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை

2017-02-23@ 00:04:40

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதி மற்றும் ஆட்கள் திரட்டிய வழக்கில் மயிலாப்பூரை சேர்ந்த வாலிபரிடம் 2வது நாளாக தீவிரவாத தடுப்பு போலீசார் சிரியாவில் உள்ள பயங்கரவாத தலைவரிடம் நேரடியாக பேசியது என்ன என்பது குறித்து துருவி துருவி  விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை ேசர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன் ஜமீல் அகமது வை கடந்த நவம்பர் மாதம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சென்னை மயிலாப்பூரை சோந்த முகமது இக்பாலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக ரூ.65 ஆயிரம் பணம் வழங்கியதும் தெரியவந்தது.

 இதையடுத்து ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தங்கம் கடத்தல் வழக்கில் புழல் சிறையில் இருந்த முகமது இக்பாலை கடந்த 13ம் தேதி கைது செய்தனர். பின்னர் ராஜஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டு நேற்று முன்தினம் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தமிழக உளவுத்துறை அதிகாரிகள், கியூ பிரிவு அதிகாரிகள், சென்னை மாநகர போலீசார் உதவியுடன் இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே 12 மணி நேரத்திற்கு ஒரு முறை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முகமது இக்பாலுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

முகமது இக்பாலிடம் நேற்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை  செலுத்தியுள்ளார்.

அதன்பிறகு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபுசாத் உடன் “கே.ஐ.கே. மெசென்ஜர்” மூலம் நேரடியாக முகமது இக்பால் பேசி அவர் கூறும் கட்டளைகளை நிறைவேற்றி வந்துள்ளார். இதனால் அபுசாத் எந்த விதமான கட்டளைகளை வழங்கினார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் திரட்ட எந்த விதமான வீடியோக்கள் அனுப்பட்டது.  முகமது இக்பால் வலையில் சிக்கி உள்ள 4 கல்லூரி மாணவர்கள் உட்பட 14 பேருக்கு எந்த விதமான மூளை சலவை செய்யப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்கு மூலையாக காண்பிக்கப்பட்ட வீடியோ என்ன? அதில் யார் பேசியது? மாணவர்களிடம் முகமது இக்பால் எப்படி அணுகி தன் வசப் படுத்தினார்? அபுசாத் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு என்ெனன்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்