SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு

2017-01-19@ 01:05:08

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் பைனான்ஸ் அதிபர் சிவராஜ்(44).  இவர், கடந்த 2014ம் ஆண்டு, தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கிய  பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து, அதை தனது செல்போனில் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். மொத்தம் 68 பெண்கள்  இவரால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிவராஜ் தனது செல்போனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய பாலக்கோட்டில் உள்ள முன்னா என்பவரிடம் கொடுத்தபோது, அவரது லீலைகள் அம்பலமானது. அந்த ஆபாச வீடியோக்களை, முன்னா இன்டர்நெட்டில் பரவ விட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், சிவராஜை கைது செய்த பாலக்கோடு போலீசார், சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக 4 பெண்கள் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி மீராசுமதி, பைனான்ஸ் அதிபர் சிவராஜுக்கு  4 ஆயுள் தண்டனையும், ₹2.44 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதேபோல் செல்போன் கடைக்காரர் முன்னாவுக்கு 5 ஆண்டு சிறையும், ₹61 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து சிவராஜ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்