SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டம் முழுவதும் வறட்சி : சீமை கருவேல மரங்களால் வறண்ட தூசூர் ஏரி

2017-01-18@ 13:40:43

நாமக்கல்: மாவட்டம் முழுவதும் வறட்சி நிலை காணப்படுவதை தொடர்ந்து, சீமைகருவேல மரங்களால் தூசூர் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதில் 25  ஆயிரம் ஏக்கர் பரப்பில் அடர்ந்து காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்றி நீர் நிலைகளை காக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மழை பொய்த்த நிலையில், கடும் வறட்சி காணப்படுகிறது. மேலும் விவசாயிகள் பயிர்கள் கருகியதால் பலர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனர்.  அரசு உரிய நிவராணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் நீர் நிலைகளி–்ல் நீராதாரங்களை காக்க ஏரி, குளக்கரையோர  பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இதன் படி பல்வேறு பகுதிகளில் சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்,  திருச்செங்கோடு, பரமத்திவேலூர், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளக்கரை பகுதியில் சீமை கருவேல மரங்கள், மாவட்டம்  முழுவதும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் படர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏரி, குளங்களில் உள்ள நீராதாரங்கள் குறைந்து நீரின்றி விவசாயம்  பாதிக்கப்படுகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் முக்கியமாக உள்ளது தூசூர் ஏரி்.

இதில் ஏரியை சுற்றி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏரியில் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தூசூர் ஏரியின் மூலம்  1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நெல்,கரும்பு, ராகி பயிர்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த தூசூர் ஏரி தற்போது, சீமை கருவேல  மரங்களால் நீரின்றி குட்டையாக மாறி வறண்டு காணப்படுகிறது. தற்போது இங்கு காலை மற்றும் மாலையில் கால்நடைகள் மேய்ந்து வருகிறது.

எனவே நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருக்கின்ற நீராதாரத்தை காக்க வேண்டுமானால், சீமை கருவேல மரங்களை முழுவதும் வெட்டி அகற்ற வேண்டும்.  இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இனி வரும் நாட்களில் பாசன பரப்பு மேம்படும். எனவே தூசூர் ஏரிக்கையோர பகுதிகளில் காணப்படும் சீமை கருவேல  மரங்களை மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
இது குறி்த்து சமூக ஆர்வலர்கள் கூறியது:

விவசாய நிலங்களை தவிர, பிற தாவர வாழ்வாதாரங்களை அழிக்கும் நச்சாக இருக்ககூடிய சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இம்மரங்கள் 12 மீட்டர்  வரை வளரக்கூடியது. இதன் வேர் 53 மீட்டர் வரை நிலத்தின் ஆழம் சென்று நிலத்தடி நீரை முற்றிலும் ஊறிஞ்சி விடுகிறது. இதனால் மற்ற தாவரங்கள் வளர்வது  பாதிக்கப்பட்டு, நீராதாரங்கள் குறைந்து வறட்சி ஏற்படுகிறது. இதனை தவிற்க சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், விவசாயம்  செழிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்