மதவாத சக்திகளுக்கு இடம் தர மாட்டோம்

கருத்துகள்


சென்னை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இதழான மணிச்சுடர் நாளிதழின் வெள்ளிவிழா நடைபெற்றது. முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். விழா மலரை திமுக தலைவர் கருணா£நிதி வெளியிட்டார். முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொருளாளர் இப்ராகிம் பெற்று கொண்டார்.
விழாவில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி, பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பேசினர். விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:

 என்னிடம் இந்த விழாவுக்கு தேதி கேட்ட போது என்னால் நீண்ட நேரம் அமர இயலாது. ஸ்டாலினை வைத்து விழா நடத்துங்கள் என்றேன். ஆனால் அவர் இருவரையும் அழைத்து வந்துவிட்டார். ஒரு ஏடு நடத்துவது எவ்வளவு சிரமம் என்பதை இங்கே குறிப்பிட்டார்கள். நான் முரசொலி தொடங்கி அதை நடத்த நான் பட்ட சிரமம், வேதனையை நான் இன்றும் நினைத்து பார்க்கிறேன். 90 வயதை தொடும் நிலையில் உள்ள நான் இத்தனை ஆண்டு முரசொலி நடத்த எவ்வளவு பாடுபட்டிருப்பேன் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். பெரியார், அண்ணா கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல தொடங்கிய ஏடு முரசொலி. ஒரு பத்திரிகை எந்த கொள்கைக்காக இருக்கிறது என்பதை உணர்ந்து அதன் ஆசிரியர் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டதால் தான் திராவிட இயக்கம் இன்று எங்களுக்கு வழிகாட்டுங்கள் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினாரே, அந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

கடந்த திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்ற போது மைனாரிடிகளுக்காக நடக்கும் ஆட்சி என்று பெருமையுடன் கூறினேன். அந்த மைனாரிடி மக்களுக்கு ஆந்திராவில் தனி இடஒதுக்கீடு என அறிவித்ததும் அதை ஏற்கமாட்டேன் என்றது யார் என்பதை முஸ்லிம் மக்கள் மறந்திருக்க முடியாது. அப்படி மறந்திருந்தால் ஏதோ லாப நஷ்ட கணக்கு பார்த்து மறந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் அவர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தபோது எதிர்த்தவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நபிகள் நாயகம் பிறந்த நாளைக்கு விடுமுறை தந்தது திமுக ஆட்சி. அடுத்து வந்த அம்மையார் ஆட்சி அதை ரத்து செய்தது.

 ஏமாறுபவர்கள் தமிழர்கள் என்பதால் ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான். எனவே ஏமாந்து விடாமல் இருக்கவேண்டும். இன்றுள்ள சூழ்நிலையில் திமுக எந்த காலத்திலும் மதவாத சக்திகளுக்கு இடம் தராது. அப்போது நாங்கள் பிஜேபியுடன் உறவு கொண்டபோது கூட தியாகராய நகரில் நடந்த விழாவில் பேசிய சி.சுப்பிரமணியம், கருணாநிதி இருக்குமிடத்தில் மதவாத சக்தி நிச்சயம் தலை காட்டாது என்றார்.

அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் திமுக கடைசி வரை இருந்தது. அந்த நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படும் நிலை வந்ததும் உறவை அறுத்து கொண்டு வெளியே வந்தவன் கருணாநிதி. இந்தியாவை, தமிழ்நாட்டை பொருத்தவரை மதவாத சக்திகளுக்கு நிச்சயமாக, கண்டிப்பாக இடம் தர மாட்டோம் என்ற உறுதியை இங்கே தெரிவிக்கிறேன்.
 இவ்வாறு கருணாநிதி பேசினர்.

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

தடம் பதித்த தாரகைகள்: சோபி ஸ்கால்உலகம் முழுவதுமே மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போர் காலகட்டம்... ஹிட்லர் தலைமையில் ஜெர்மனிதான் ...

ஒளிகாட்டி : சூர்ய நர்மதா தோட்டக்கலை ஆலோசகர்‘ஒரு செடிதோட்டக்கலை பற்றி கூறுவதைவிடஅதிகமாக ஒன்றும்,ஒரு கலைஞரால்அவருடையகலையைப் பற்றிப் பேசிவிட முடியாது!’  - பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன் காக்டீவ்

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

22

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
முயற்சி
சாதுர்யம்
கடமை
திறன்
அத்தியாயம்
வதந்தி
சோர்வு
சாதனை
நன்மை
யோசனை
நிம்மதியின்மை
வெற்றி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran