SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்

2017-01-06@ 15:16:33

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 1991 - 95 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டி.டி.வி. தினகரனின் வங்கி கணக்குகளில் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.

இதையடுத்து மத்திய அமலாக்கத்துறை 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால் தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் இதனால் வழக்கு தொடர முடியாது என தினகரன் வாதிட்டு வந்தார். இதை நிராகரித்த  அமலாக்கத்துறை டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது.

அமலாக்கத்துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தனர். இந்நிலையில் சசிகலா அக்கா மகன் தினகரனுக்கு அமலாக்கப்பிரிவு ரூ.28 கோடி அபராதம் விதித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து. மேலும் தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்