SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண மதிப்பு ரத்தை அடுத்து தங்கத்துக்கு கட்டுப்பாடு: பெண்கள் 500, ஆண்கள் 100 கிராம் வைத்துக்கொள்ள அனுமதி

2016-12-01@ 16:52:56

டெல்லி: வருமான வரி சட்டத் திருத்த மசோதாவில் நகைக்கு புதிதாக எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீடுகளில் தங்கநகை இருப்பது குறித்த குழப்பத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி சட்டப்பூர்வமான வருமானத்தை கொண்டு எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வாங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பழைய சட்டத்தின் படி திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம். மேலும் ஆண்கள் பழைய சட்டத்தின் படி 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படமாட்டாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய சட்டத்தில் உள்ள அம்சங்கள் தான் இப்போதும் தொடரும் என வருமானவரி சட்டத் திருத்த மசோதா பற்றி நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் வீடுகளில் தங்கம் வைத்திருப்பவர்களிடம் வருமானவரி கணக்கின் படி தங்கம் பறிமுதல் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பரம்பரை நகைகளுக்கும் பழைய தங்க கட்டிகளுக்கு வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி ஆய்வின் போது அனுமதித்த அளவை விட கூடுதலாக தங்கம் இருந்தால் 60% வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய சட்டத்தில் 30% வரி மட்டுமே பிடிக்கப்பட்டு வந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்