SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளுக்கு பொறுப்பான தாயாக இருக்க வேண்டிய கடமையால் நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் : நடிகை கவுதமி அறிவிப்பு

2016-11-02@ 01:06:09

சென்னை: நடிகர் கமல்ஹாசனை பிரிந்து வந்துவிட்டதாக நடிகை கவுதமி தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை கவுதமி. தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், ரஜினிகாந்தின் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், எங்க ஊரு காவக்காரன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தேவர் மகன், நம்மவர் உட்பட பல படங்களில் நடித்தார்.

பின்னர் 10 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், கமல்ஹாசன் ஜோடியாக ‘பாபநாசம்’ படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். கவுதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். பின்னர் கணவரை பிரிந்த கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்துள்ளார் நடிகை கவுதமி.
இதுபற்றி கவுதமி தனது வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:

இனி கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்வதில்லை என்ற முடிவை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். என் வாழ்க்கையில் நான் எடுத்துள்ள மிகப்பெரிய முடிவுதான் இது. சுமார் 13 வருடமாக அவருடன் வாழ்ந்து வந்தேன். ஒன்றாக வாழ்ந்துவிட்டு இருவரும் அவரவர் பாதையில் பிரிவது என்பது சாதாரண விஷயமல்ல. பழைய வாழ்வை மறந்து நிலையான உறவில் இருக்கும்போது, இரண்டு விஷயங்கள் மட்டுமே அவர்கள் முன் இருக்கும். ஒன்று கனவை கலைத்துவிட்டு சமரசம் செய்து கொண்டு வாழ்வது. இல்லையென்றால் தனிமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுவது. கடந்த இரண்டு வருடமாக இது என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. இதையடுத்து, இப்போது பிரிவது என்ற கடுமையான இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இதன் மூலம் அனுதாபத்தைக் கோருவதோ, மற்றவர்களை குற்றம் சொல்வதோ என் நோக்கமல்ல. மாற்றங்கள் தவிர்க்க முடியாது என்பதை என் வாழ்க்கையில் இருந்து புரிந்துகொண்டேன். இப்போது நான் எடுத்துள்ள முடிவு, ஒரு பெண் தன் வாழ்க்கையில் எடுத்துள்ள கடினமான  ஆனால், அவசியமான முடிவு. ஏனென்றால், எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு தாய். என் மகளுக்குப் பொறுப்பான அம்மாவாக இருக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நான் அப்படி இருக்க நினைக்கிறேன். அதற்கு நான் அமைதியான மனநிலையில் இருக்க வேண்டியது அவசியம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. அதில் ஒளிவுமறைவு இல்லை. அவரது சாதனைகள், திறமையை கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

அவர் கடும் சவால்களை சந்தித்தபோதெல்லாம் அவருடன் துணையாக இருந்திருக்கிறேன். அந்த தருணங்கள் விலை மதிக்க முடியாதது. ஆடை வடிவமைப்பாளராக அவருடன் பணியாற்றியபோது  அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடன் நானும் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவில் அவரது படைப்புகள் இன்னும் வெளி வரும். நானும் அதைப் பாராட்டுவேன்.  கடந்த 29 ஆண்டுகளாக, ரசிகர்கள் எனக்கு அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு துணையாக இருந்திருக்கிறது. இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.

cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
abortion pill procedures farsettiarte.it having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்