SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை அருகே ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை மதபோதகரின் லீலைகள் குறித்து கடிதம்

2016-10-25@ 00:17:06

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்தவர் ஜோசுவா இம்மானுவேல் ராஜ்(35). கிறிஸ்தவ மத போதகர். இவர் பெண்களுடன் நெருங்கி பழகி லாட்ஜில் தங்க வைத்து ஆபாச படம் எடுத்ததுடன் இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நகைகள், பணம் பறித்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட திருமணமான 3 பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் நெல்லை எஸ்பி விக்ரமனிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி ஜோசுவா இமானுவேல்ராஜ் மற்றும் அவரது கார் டிரைவரான சாத்தூரைச் சேர்ந்த வினோத்குமாரை(23) கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜோசுவா இமானுவேல்ராஜ் மீது பாலியல் புகார் கொடுத்த பிஎட் கல்லூரி மாணவியான தாழையூத்து பாப்பான்குளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் அனுஷ்யா(22) நேற்று முன்தினம் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி, மாணவி எழுதிய கடிததத்தை கைப்பற்றினர். அதில் தனது சாவுக்கு போதகர் ஜோஸ்வா உள்பட 4 பேர் தான் காரணம் என்றும் அவர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

மதபோதகரின் செக்ஸ் லீலைகள் குறித்து அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது: நான் எனது தம்பியை டியூசனில் சோ்க்க தாழையூத்து உஷா என்பவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் ரூ.7 லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார். பின்னர் பாதிரியார் ஜோஸ்வா என்னிடம் பேசினார்.  என் வீட்டு நிலவரம் பற்றி கூறிய அவர், உனக்கு வீட்டில் இப்படியெல்லாம் துன்பங்கள் நேரிடும் என்றும் தெரிவித்தார். இதை நான் உண்மையென்று நம்பினேன். உஷா என்னிடம்  பாதிரியார் ஜோஸ்வா சேலத்தில் இருப்பதாகவும் அவரை சந்தித்தால் உனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்றார். ஆகஸ்ட் 27ம் தேதி நான் தாழையூத்தில் இருந்து பஸ் ஏறி மதுரை சென்றேன். அங்கிருந்து கரூர் செல்ல பஸ் ஏறினேன். கரூர் பஸ் நிலையத்தில் இறங்கியதும்  ஜோஸ்வா அங்கு காரில் வந்து என்னை லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். நான் அணிந்திருந்த 6 பவுன் நகையை ஜெபம் செய்து தருவதாக கூறி வாங்கினார். ஆனால் நகையை திருப்பி தரவில்லை.

பின்னர் என்னை ஏற்காடு அழைத்துச் சென்று லாட்ஜில் நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ எடுத்தார். நான் மறுத்த போது கொன்று விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்தார். 2ம் தேதி அங்கிருந்து தப்பி வந்து தாழையூத்து டிஎஸ்பி,யிடம் புகார் செய்தோம். ஆனால் போலீசார் என்னை அவதூறாக பேசினர். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அனுஷ்யா உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்