SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்கள் முன்னேற ஆங்கில மொழித் திறன் வேண்டும்: அமெரிக்க தூதரக அதிகாரி பேச்சு

2016-10-18@ 00:12:48

சென்னை: நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஆங்கில மொழித்  திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்  என்று பிராட்லே ஹார்ன் தெரிவித்தார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத் தலைவர் அலுவலகம், சென்னை எழும்பூரில் உள்ள இந்தியன் சமூக கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து ‘‘ஆங்கில அணுகுமுறை கல்வி உதவித் தொகை திட்டம்’’ என்ற கல்வித் திட்டத்தை தொடங்கியுள்ளன. இதற்கான தொடக்க விழாக சென்னை லலோயா கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், நிர்வாகி ஜெயபதி பிரான்சிஸ்  வாழ்த்திப் பேசினர்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பண்பாட்டு உறவுகளுக்கான அதிகாரி எரிக் லுண்ட் சிறப்புரையாற்றினார புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆங்கில மொழிக்கான மண்டல அதிகாரி பிராட்லே ஹார்ன் தலைமை தாங்கியதுடன் பயிற்சி முடித்த மாணவ மாணவியருக்கு சான்றுகள் வழங்கி பேசியதாவது: ஆங்கில அணுகுமுறை கல்வி உதவித் தொகை திட்டம் என்பது அமெரிக்க மாநிலங்களுக்கான துறையின் கல்வி மற்றும் பண்பாட்டு உறவுகள் பிரிவின் மூலம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 85க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பள்ளிகளில் இடைநின்ற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, 16 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவ மாணவியரிடையே ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதாகும். ஆங்கில மொழித் திறன் பெற்றால் உயர் கல்வியில் அதிக வாய்ப்பு கிடைக்கும். அமெரிக்காவில் கல்வி கற்கும் வாய்ப்பும் முன்னுரிமையும் கிடைக்கும்.  

தமிழகத்தில் சென்னை எழும்பூரில் செயல்படும் இந்தியன் சமூக கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 130 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு 20 மாதங்கள் ஆங்கில மொழி பயிற்றுவிக்கப்படும். ஆங்கில மொழி கற்றால் உயர் கல்வியில் சாதிக்க முடியும். நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதை குறிவைத்து படித்தால் முன்னேற முடியும். அதற்கு ஆங்கில மொழித்  திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிராட்லே ஹார்ன் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்