SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு தமிழகத்துக்கு காவிரி நீர் கர்நாடக அரசு சம்மதம

2012-09-12@ 06:43:54

பெங்களூர்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இம்மாதம் 20ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் திறக்க, கர்நாடக முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.   காவிரி பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்துக்கு  தினமும் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. வரும் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. இந்த 2 விஷயங்கள் குறித்து, பெங்களூர் விதான் சவுதாவில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர், ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதத்தின்போது, கர்நாடகாவில் தற்போது வறட்சி நிலவும் சூழ்நிலையில், தமிழகத்துக்கு கூடுதல் நீரை அளிப்பது கடினம் என்று விளக்கப்பட்டது. ஆனால், அணைக்கட்டுகளில் சேகரிக்கப்படும் நீரை கர்நாடகாவும் பயன்படுத்தக் கூடாது என்ற தமிழகம் வாதிட்டது.

இதை கருத்தில் கொண்டுதான், தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விடும்படி உச்ச திமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுக்கு முன்பிருந்தே, இப்போதும் கூட தமிழகத்துக்கு தினமும் 7500 கனஅடி முதல் 8 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவால் கர்நாடகாவுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. வரும் 15ம் தேதி மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளேன். அதில் எடுக்கப்படும் முடிவை 19ம் தேதி நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தெரிவிப்பேன்.  இவ்வாறு ஷெட்டர் கூறினார்.‘தமிழகம், கர்நாடகாவில் நிலவும் உண்மை சூழ்நிலையை ஆய்வு செய்ய குழு அமைக்க பரிந்துரைக்கப்படுமா?’ என்ற கேள்விக்கு, ‘‘பிரதமருடன் நடக்கும் கூட்டத்தில் இது குறித்து பேசுவோம். தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமானது அல்ல. எனவே, கர்நாடக விவசாயிகள் கவலை அடையத் தேவையில்லை. 19ம் தேதி காவிரி நதிநீர் ஆணையம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்றார் ஷெட்டர்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
venlafaxine forum mdwguide.com venlafaxine 150


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்