SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் அணை கட்டுமான பணியின்போது மிகப்பெரிய ராட்சத பாம்பு பிடிபட்டது: 33 அடி நீளம், 400 கிலோ எடை

2016-09-26@ 00:53:44

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் அணை கட்டுமான பணியின்போது சுமார் 33 அடி நீளம், 400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ராட்சத பாம்பு பிடிபட்டது. வடக்கு பிரேசிலின் பாரா பகுதியில் ஜிங்கு ஆற்றின் மீது கிளோ மோன்டே அணை கட்டுவதற்கான கட்டுமான பணிகள்  நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய நான்காவது அணை இதுவாகும். முதல் மூன்று அணைகள் சீனாவில் அமைந்துள்ளது. அணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள பாறைகள் வெடிவைத்து அகற்றப்பட்டு வருகிறது. ஏராளமான ஊழியர்கள் அணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த குகை ஒன்றை ஊழியர்கள் வெடி வைத்து தகர்த்தனர். அப்போது அதனுள் மிகப்பெரிய ராட்சத பாம்பு இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராட்சத பாம்பை பார்த்த அவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் சுதாரித்த அவர்கள்  அந்த ராட்சத பாம்பை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அகற்றி இரும்பு சங்கிலி போட்டு கட்டி வைத்தனர்.  பிடிபட்ட பாம்பு சுமார் 33 அடி நீளமும், 400 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.  இதன் உடல் சுற்றளவு சுமார் 1 மீட்டர் என கூறப்படுகிறது.   

உலகிலேயே இதுவரை பிடிபட்ட பாம்புகளிலேயே மிகவும் பெரியது இந்த ராட்சத பாம்புதான் என்று கூறப்படுகிறது. இந்த பாம்பு உயிருடன் உள்ளதா அல்லது கொல்லப்பட்டுவிட்டதா என்பது குறித்த சரியான தகவல் எதுவும் தெரியவில்லை. அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் 25 அடி நீளம் கொண்ட ராட்சத பாம்பு பிடிபட்டது இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்