SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை

2016-09-20@ 00:21:06

கோவை : தன்னை காதலிக்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று ஆட்டோ டிரைவர் மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருதலைக்காதல் பலி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புதுசித்தாபுதூர் அருகேயுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் தர். ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மகள் அட்சயா (15). இவர், கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம், அண்ணா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (22) என்பவர் நட்பாக பழகியுள்ளார். அட்சயாவும் அவருடன் பேசியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பிரபு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அட்சயா ஏற்கவில்லை. ‘நான் படிக்கவேண்டும், காதலிக்க விருப்பமில்லை, இனி என்னுடன் பேசவேண்டாம், இனி நான் உங்களிடம் பேசமாட்டேன்’ எனக்கூறி விட்டார்.
 
ஆனால், பிரபு அவரை விடுவதாக இல்லை. அட்சயா பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அட்சயா தனது பெற்ேறாரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர், பிரபுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால், பிரபு இதைப்பற்றி கவலைப்படாமல், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற அட்சயாவை வழி மறித்து, ‘’என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்’’ என மிரட்டியுள்ளார். இதில், மனம் உடைந்த அட்சயா, தனது வீட்டிற்கு சென்று, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர். ஒருதலைக்காதல் பலி நீடிப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

how do abortion pill work pristineschool.com misoprostol abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்