SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளைய சமூகத்தினர் மனதில் திரைப்படங்கள் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும்

2016-09-04@ 00:43:43

* வக்கிர பாடல்களை தவிர்க்க வேண்டும் * தயாரிப்பாளர்களுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: திரைப்படங்கள் இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் படங்களை தயாரிக்க முன்வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை மணலியை சேர்ந்தவர் பிரபுகுமார்(வயது 19). இவர் சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி செய்ததாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.  மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ்அப்போது, அவரது சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரும், அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். அவர் மீது  பொய் புகார் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் மனுதாரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.  அரசு வக்கீல் வாதிடும்போது, பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணும் அவரது தாயும் சாலையில் நடந்த சென்றுகொண்டிருக்கும்போது, மனுதாரர் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, ஓடி போயி கல்யாணத்தான் கட்டிக்கலாமா?’ என்று பாடியுள்ளார். இதை தட்டிக்கேட்ட அந்த பெண்ணையும் அவரது தாயாரையும் மனுதாரர் தாக்கியுள்ளார். அவரை போலீஸ் காவலில் விசாரிக்கவுள்ளோம் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் சினிமா பாட்டு மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இருந்ததாக தெரியவில்லை.

இந்த வழக்கில் அவரை போலீஸ் காவலில் விசாரிக்கத் தேவையில்லை. எனவே, அவருக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை மற்றும் மாலையில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும்.இந்த வழக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவானது என்பதால் வழக்கை விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். திரைப்படங்களைத் தயாரிப்பவர்கள் இளைய சமூகத்தினர் மத்தியில் நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் பதிய வைப்பதற்குப் பதிலாக, வக்கிரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல்களை வெளியிட்டு இளைய சமுதாயத்தினரின் மனதைக் கெடுக்கிறார்கள். இதன் மூலம் நமது கலாசாரம் மற்றும் அறநெறிகள் சீரழிக்கப்பட்டு வருகிறது. திரைப்படங்கள் போன்ற ஊடகங்கள் மிகச் சக்திவாய்ந்தவையாகும். அவை கற்றுக்கொடுப்பவை எப்போதும் மறக்காது.

எனவே, திரைப்படங்களைத் தயாரிப்பவர்களுக்கு இளைய சமூகத்தினர் மனதில் நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும். எதிர்கால நாட்டின் தூண்களாக இளைய சமூகத்தினருக்கு நல்ல சிந்தனைகளையும், எண்ணங்களையும் ஏற்படுத்த திரைத்துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்