SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரியனை சுற்றி திடீர் ஒளிவட்டம்

2016-08-26@ 01:09:27

பழநி : சூரியனை சுற்றி திடீர் ஒளிவட்டம் தோன்றியதால் பழநியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடைக்காலம் போன்று வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாடவே முடியவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சூரியனை சுற்றி நேற்று திடீர் ஒளிவட்டம் தோன்றியது. வானவில் போல் பல வண்ணங்களில் சூரியனை சுற்றி தோன்றிய அந்த ஒளிவட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனை மக்கள் ஆர்வமுடனும், ஒருவித பீதியுடனும் பார்த்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் மோகனாவிடம் கேட்டபோது, ‘‘பூமியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில், சூரியனுக்கு இடையில் ‘சிர்ரோ ஸ்டேடஸ்’ எனும் செதில் செதிலான அமைப்பில் மேகங்கள் இருக்கும். பூமியில் இருந்து ஆவியாகும் நீர் இதில் சேகரமாகும். இந்நீர் பின்பு பனித்துகள்களாக மேகத்தில் படிந்திருக்கும். இந்த பனித்துகள்கள் அதிகமாகும்போது சில நேரங்களில் மழை பெய்யும். சூரியனின் கதிர்கள் இந்த பனித்துகள்களில் 22 டிகிரி கோணத்தில் விழும்போது வண்ணங்கள் பிரதிபலிக்கும். இதற்கு ‘சூரிய ஒளிவட்டம்’ என்று பெயர். இதுபோல் இரவு நேரங்களில் சந்திரன் தோன்றும்போது அதன் ஒளிக்கதிர்கள் பட்டும் பிரதிபலிக்கும். இது சாதாரண நிகழ்வே,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

  • priyangaganthi

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்