SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூர், மதுரையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது

2016-08-20@ 15:51:03

திருப்பூர்: திருப்பூரில் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த முருகன் என்பவர் 10க்கும் மேற்பட்ட  சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள கடைக்கு சென்ற  தனது மகளை காணவில்லை என திருப்பூரை சேர்ந்த சிறுமியின் பெற்றோர், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அடுத்த நாளே  சிறுமி வீடு திரும்பினார். பெற்றோர் விசாரித்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட  காவல் துறையினர், கடைத்தெருவில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மர்ம நபர் ஒருவர் சிறுமியை சைக்கிளில் கடத்தி செல்வது தெரியவந்தது. அந்த வீடியோ பதிவை மதுரையில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பியதில், அந்த நபர்  மதுரையை சேர்ந்த ஆசிட் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ஆசிட் முருகனை தேடிவந்தனர். நேற்று முன்தினம் இரவு  திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், முதல்  மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், முருகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களில் இரண்டாவது மனைவிக்கும், முருகனுக்கும் இடையே  ஏற்பட்ட தகராறில் மனைவி மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கு, மதுரை காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், மதுரையில் முருகன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் 6 வழக்குகள் சிறுமிகளை கடத்தி பாலியல்  துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மதுரை, திருப்பூர் என இரண்டு மாவட்டத்திலும் 10க்கும் மேற்பட்ட  சிறுமிகளை முருகன், கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்