SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூக்கு உறுதியானது கசாபுக்கு தெரியாத

2012-08-31@ 12:17:28

மும்பை: தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியான விவரம், அஜ்மல் கசாபுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என மும்பை ஆர்தர் ரோடு சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் உறுதி செய்தது. இதுதொடர்பாக அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த விவரம் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அஜ்மல் கசாபுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும், ஆர்தர் ரோடு சிறையில் தனி அறையில் பலத்து பாதுகாப்புடன் அஜ்மல் கசாப் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு பத்திரிகைகளோ, டிவி வசதியோ கிடையாது. சிறைக்காவலர்கள் அவனுடன் பேசவும் தடை உள்ளது. அவனது பாதுகாப்புக்கு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தாது என உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கசாப் கருணை மனு தாக்கல் செய்தாலும் அதன் மீது உடனடியாக முடிவு எடுக்கப்படும் என்றார்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்