SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி எட்டாக்கனி

2016-08-19@ 02:34:16

இனி மருத்துவ படிப்புகளில் சேர ``நீட்’’ தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே வழி என்ற நிலை உருவாகியுள்ளது. 2016-17ம் கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர ``நீட்’’ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும். நாடு முழுவதும் 412 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 52,715 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில், தமிழகம் உள்பட சில மாநிலங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 85 சதவீத ``சீட்’’களை கவுன்சலிங் மூலம் நிரப்புகின்றன. 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்புகின்றன. நடப்பாண்டில் இந்த 15 சதவீத இடங்களை நிரப்ப ``நீட்’’ (தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு) கடந்த மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. புதுடெல்லியில் உள்ள சி.பி.எஸ்.இ இந்த தேர்வை நடத்தியது. மொத்தம் 7.31 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இவர்களில், 4.09 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், வடமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம். நாடு முழுவதும் 30 ஆயிரம் இடங்கள் ``நீட்’’ தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.  இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்பில் சேர ``நீட்’’ தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இம்மசோதாவை நிறைவேற்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், இறுதியில் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த முடிவினால், தமிழக கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.   இந்த பாடத்திட்டத்திற்கும் ``நீட்’’ தேர்வு நடக்கும் பாடத்திட்டத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

இதனால், தமிழக கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   கல்வியாளர்களின் கருத்தின்படி, ``நீட்’’ தேர்வில், மாணவர்கள் பள்ளியில் பெறப்படும் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது. இதனால், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவனாக இருந்தாலும் சரி, ``நீட்’’ தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் நுழைய முடியும். இதனால், மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை இழக்கும் நிலை இனி தமிழகத்துக்கு ஏற்படும். மாநில மொழியில் கேள்விகள் கேட்டு ``நீட்’’ தேர்வு நடத்தினால் தகுதியான மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். தமிழக கிராமப்புற மாணவர்களும் பயனடைவார்கள். ``நீட்’’ தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற வேண்டுமானால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கல்விமுறை அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கு சாத்தியம் இல்லாத நிலையில் அடுத்த ஆண்டு முதல், தமிழக மாணவர்கள் ``நீட்’’ தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனி, சி.பி.எஸ்.இ. கல்வி முறை மற்றும் இந்தி மொழி பயிலும் வடமாநில மாணவர்கள் மட்டுமே ``நீட்’’ தேர்வில் வெற்றிபெறும் நிலை உருவாகியுள்ளது.

``வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’’ என்று அறிஞர் அண்ணா அன்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அது, மீண்டும் நடக்கப்போகிறது. தமிழக மாணவர்கள், மருத்துவ துறையில் பின்னுக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வரை ``நீட்’’ தேர்வு மட்டுமே இனி ஒரே வழி.

cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்