SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேகம், விவேகமானதே

2016-08-18@ 02:41:37

வேகம் விவேகம் அல்ல என்பது வாகனங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். வளர்ச்சியை பொருத்தவரையில் அது மிக, மிக அவசியம். இல்லாவிட்டால், குட்டி நாடு கூட மேலே ஏறிச் சென்று பரிகாசிக்கும். பின்னர் ஒரு நாளில் அதனிடமே கையேந்தி நிற்கக்கூடிய நிலை கூட உருவாகும். தொலைத் தொடர்புத் துறையில் யாராலும் ஒட்டுக் கேட்கவே வழியில்லாத அதிநவீன செயற்கைக்கோளை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. குவாண்டம் இயற்பியல் அடிப்படையிலான தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை இந்த செயற்கைக்கோள் அளிக்கும். இதனால் எந்த நாட்டினாலும் இன்னொரு 50 ஆண்டுகளுக்கு சீனாவின் தகவல்களை ஒட்டு கேட்கவோ, அதை இடைமறித்து பெறவோ முடியாது. இதுபோன்ற நவீன செயற்கைக்கோளை உருவாக்குவது தொடர்பாக இஸ்ரோவும் உடனடியாக ஆய்வில் இறங்க வேண்டும். இப்போதுள்ள நிலையில், இந்தியாவின் ஒவ்வொரு விஷயத்தையும் எதிரி நாடுகள் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவின் தகவல்களை பெறுவதற்காக அவர்கள் பலகோடி ரூபாய் செலவழிக்கவும் தயாராக உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், அவர்களுக்கு வாய்ப்பே அளிக்காத ெதாழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். இது நட்பு நாடுகளிடம் இருந்து பெற்றாலும், அதனால் சில அசவுகரியங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக உள்நாட்டிலேயே அதை தயாரிப்பதுதான் மிகச்சிறப்பானது. இதற்கான அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளன. இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் உலகத்திற்கே சவால் விடக்கூடியவர்கள் என்பது, ஒரு ஆட்டோ கட்டணச் செலவில் சந்திராயனுக்கு விண்கலத்தை அனுப்பியதில் இருந்தே நிரூபித்துள்ளோம். பல ஆண்டு செயல் திட்டத்தின் இறுதியில்தான் ஜிபிஎஸ் போன்ற அதிநவீன புவிவழிகாட்டி செயற்கைக்கோள் சமீபத்தில் முழுமையடைந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் ஜிபிஎஸ் முறையை பயன்படுத்துவதற்கு பதிலாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைந்த வழிகாட்டி தொழில்நுட்பத்தை பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்படுத்த முடியும்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று, இறந்தவர்களின் அஸ்தியை நிலவுக்கு எடுத்து செல்லும் பணியை தொடங்கி உள்ளது. ஒரு கிலோவுக்கு ₹20 கோடி வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு கபாலி பட ரேஞ்சில் பலர் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்துள்ளது, ஆச்சரியத்தின் உச்சக்கட்டம். தனியார் நிறுவனமே இவ்வளவு யோசித்து செயல்படும்போது, 120 கோடி இந்தியர்களின் அங்கமான இஸ்ரோ, இன்னமும் வேகமாக செயல்பட வேண்டும்.

abilify and coke web-dev.dk abilify and coke
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்