SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதியின் குரல்

2016-08-17@ 02:38:00

எப்போதும் தனது உணர்ச்சிகரமான பேச்சு மூலம் பிரதமர் மோடி பல்வேறு தரப்பினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். நாட்டின் 70வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது செங்கோட்டையில் கொடியேற்றி விட்டு தீவிரவாதத்திற்கு ஒருபோதும் இந்தியா அடிபணியாது என சூளுரைத்ததோடு, கடந்த இரு ஆண்டுகளில் தனது ஆட்சி காலத்தின் சாதனைகளையும் பட்டியலிட்டார். எப்போதும் பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து அதிருப்தி குரல் எழும்புவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இந்தமுறை பிரதமரின் பேச்சு குறித்து வெளிப்படையாகவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தனது கவலையை பதிவு செய்திருக்கிறார்.

பிரதமரின் சுதந்திர தின உரையில் நீதிபதிகள் நியமனம் குறித்த கருத்துக்களை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் நீதித்துறையை பற்றி பேசாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளுக்குள் வழக்குகள் முடிக்கப்படும். ஆனால் தற்போது அவ்வாறு முடிக்க இயலவில்லை. வழக்கு எண்ணிக்கை மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அதை பூர்த்தி செய்யமுடியவில்லை. எனவேதான் பிரதமர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த நான் மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர். அவரது கவலையின் நியாயத்தை புறம் தள்ளி விடமுடியாது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது குறித்து பலமுறை அவர் சுட்டிக்காட்டி விட்டார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் நீதித்துறையின் பளுவை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி முன்னிலையிலேயே கண்ணீர் விட்டு தனது உணர்ச்சியை தாகூர் வெளிப்படுத்தியதை மறந்திருக்க முடியாது. இத்தகைய சூழலில் சாதாரண குடிமகனை போல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், பிரதமரின் சுதந்திர தின உரையிலாவது தனது ஏக்கத்திற்கு ஒரு விடை கிடைக்கும் என எதிர்பார்த்தது இயல்பே. வறுமை ஒழிப்பும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு ஒரு அரசின் கடமை முடிந்து விடுவதில்லை. அதே மக்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் உரிய நீதியும் தாமதமின்றி கிடைப்பதற்கு வழி வகை செய்யவேண்டிய பொறுப்பும் அரசுக்குத்தான் மிகுதியாக உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், கீழ் நீதிமன்றங்களில் 2.6 கோடி வழக்குகளும் தேங்கியுள்ளன. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடம் 43 சதவீதம் காலியாக உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம்(உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட தேர்வுக்குழு)  75 பேர் பட்டியலை மத்திய அரசுக்கு 8 மாதத்திற்கு முன் அனுப்பி வைத்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே சில தினங்களுக்கு முன் பொதுநல வழக்கில் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதனால் நீதித்துறையின் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதை இனியும் சகிக்கமுடியாது என குறிப்பிட்டனர். அதன் பின்னரும் பிரதமர் மவுனம் சாதித்ததால் தனது துறைக்கு நீதி கேட்டு தலைமை நீதிபதி குரல் எழுப்பியுள்ளார். வழக்கில் மட்டும் தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகாது. நீதிபதிகள் நியமனத்திலும் தாமதிப்பது மறுக்கப்படும் நீதிதான் என்பதை மத்திய  அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

venlafaxine forum click venlafaxine 150
abortion pill procedures late term abortion pill having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்