SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலாட்டும் பாகிஸ்தான்

2016-08-16@ 01:29:46

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், தூதரகத்தில் நடைபெற்ற அந்நாட்டின் 70வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், காஷ்மீர் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். காஷ்மீர் மக்கள் சுயமுடிவெடுக்கும் உரிமையைப் பெறும் வரை அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் என்று பேசியுள்ளார். நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டு அதுவும் நாடே தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த வேளையில், பாகிஸ்தான் தூதரின் இந்த அத்துமீறிய பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியிலும் ஜனநாயகத்திலும் மிகுந்த பற்று கொண்டு உலக அரங்கில் அமைதியான முறையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தியாவை பலவீனமாக கருதி, சீண்டிப்பார்ப்பதே பாகிஸ்தானுக்கு வேலையாக போய்விட்டது.

காஷ்மீரின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமித்துக் கொண்டு இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உண்மையான பிரச்னை என்றால் அது, இதுதான். இதை திசை திருப்பும் வகையில் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதும், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து நாசவேலைகளில் ஈடுபட தூண்டுவதும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதும் என்று திட்டமிட்டு பாகிஸ்தான் சதி செயல்களை அரங்கேற்றி வருகிறது.

 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக வன்முறை நீடித்து வருகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் தூதர் பாசித் ஆகியோரின் அத்துமீறிய பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அத்துமீறி பேசிய

பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை நாட்டைவிட்டே திருப்பி அனுப்ப வேண்டும். ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அந்த மாநிலத்தின் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தாங்களே அரசை தேர்ந்தெடுக்கின்றனர்.

தான் ஆக்ரமித்துள்ள பகுதியை (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மீட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்படுகிறது. பாகிஸ்தானின் இந்த தீய நோக்கத்தை ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அரசியல்வாதிகள், அந்நாட்டின் ராணுவ சர்வாதிகாரிகள் விரிக்கும் மாய வலையில் விழுந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காஷ்மீர் எல்லைப் பகுதியை காக்கச் சென்ற ராணுவ வீரர்களில் எண்ணற்ற வீரர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகத்தை திறந்த மனதுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

abortion pill procedures late term abortion pill having an abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HalloweenDogParade

  நியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்!

 • DallasTornado2210

  டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

 • PacificPalisadesFire

  லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

 • BeloHorizontePlaneCrash

  பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி

 • NaruhitoEnthronement

  ஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்