SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்

2016-08-15@ 00:16:27

வழக்கம்  போல் இந்தாண்டும் ஆசிரியர்கள் கலந்தாய்வு மிக தாமதமாக இந்த மாதம் முதல் வாரத்தில்  தொடங்கி நடந்து வருகிறது. கல்வி அதிகாரிகள் இடமாற்றம் தொடங்கி, உயர்நிலை  பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்குவது வரை சத்தமில்லாமல் நடந்தேறியது.  இதுவரை கல்வி அதிகாரிகள் தொடங்கி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வரை மாநிலம்  முழுவதும் சுமார் 12 ஆயிரம் பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மிக  அதிக பாதிப்பை எதிர்கொள்வது தொடக்க கல்வித்துறையில் தான். அரசியல்  தலையீடுகளும் தொடக்க கல்வியில்தான் அதிகம். தொடக்க கல்வித்துறையில்  இடமாறுதலில் குளறுபடியே பணி நிரவலில்தான் உருவாகிறது. மத்திய அரசு 2009ல்  அமல்படுத்திய இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தொடக்க பள்ளிகளில் 25  குழந்தைகளுக்கு ஓராசிரியர் நியமிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை.  அதாவது 60 குழந்தைகள் இருக்கும் பள்ளியில் 2 ஆசிரியர்களும், 61க்கு மேல்  90 குழந்தைகள் இருந்தால் 3 ஆசிரியர்களும் இருக்கவேண்டும் என பள்ளி  கல்வித்துறை உத்தரவு தெரிவிக்கிறது. இதனால் ஆசிரியர் எண்ணிக்கை சில  இடங்களில் குறைகிறது.

தொடக்க பள்ளிகளில் காலி பணியிடங்கள் கணக்கிட்டு  இடமாறுதல் வழங்கிய பின் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் சீர் செய்தால் சிக்கல்  ஏற்படாது. ஆனால் அதற்கு ேநர்மாறாக பணி நிரவல் முடித்த பின் இடமாறுதல்  வழங்கப்படுகிறது. அரசு உத்தரவின்படி, பணி நிரவலுக்கு கடந்த 2015  செப்டம்பரில் அந்த பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கவேண்டும். இந்தாண்டு கலந்தாய்வுக்கு 2015 செப்டம்பர் 30ல் இருந்த மாணவர் எண்ணிக்கை,  அல்லது 2016 ஆகஸ்ட் 1 அன்று மாணவர் எண்ணிக்கையில் எது அதிகமோ, அதன்படி  ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் உபரி ஆசிரியரை  கணக்கிட்டு இளையவர்களை நிரவல் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபடுவதால் தான் சிக்கல் ஏற்படுகிறது.

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு  குழந்தைகள் சேர்க்கை குறைந்து வருகிறது. தொடக்க பள்ளிகளில் காலி பணியிடங்கள் கணக்கிட்டு  இடமாறுதல் வழங்கிய பின் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் சீர் செய்தால் சிக்கல்  ஏற்படாது.  இடமாறுதல் என்ற பெயரில் இன்னல்கள்  ஏற்படுத்துவதில் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அரசு  உணரவேண்டும்.

amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்