SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டம் ஒழுங்கு...?

2016-08-13@ 00:47:52

தமிழகத்தில் அன்றாடம் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதுவும், சமீபகாலமாக கொள்ளைகள் அதிகரித்துள்ளது.

* சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் டாக்டர் சாரதா வீட்டில் கடந்த 7ம் தேதி 72 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் நகைகளை அள்ளிச் சென்றனர்.

* 9-ம்தேதி சேலத்தில் இருந்து  சென்னைக்கு வந்த சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் பேங்க் ஆப்  இந்தியாவின் பணம் 6 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ரயிலின் மேற்கூரையில்  துளைபோட்டு புதுமையான முறையில் இக்கொள்ளை நடந்துள்ளது.

* கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் சுரேஷ் என்பவரது நகைக்கடையில் சுரங்கப்பாதை அமைத்து, கடந்த 10ம்தேதி இரவு கொள்ளை நடந்தது. 1.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

* சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம், நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள, மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூஜா சுப்பிரமணியம் வீட்டில், கடந்த 11ம் தேதி புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 200 சவரன் நகைகளை அள்ளிச் சென்றனர்.

* கோவை மாநகரில் ஓய்வுபெற்ற  சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நேற்று முன்தினம் 21 சவரன் நகை  கொள்ளையடிக்கப்பட்டது. அதே நாளில், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் 34  சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அங்கொன்றும், இங்கொன்றுமாக கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், தற்போது காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் வீடுகளையே குறிவைத்துவிட்டனர். இதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த போக்கு நல்லதுதானா?

என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதால் பலரும் இங்கு வந்து தொழில்துவங்க முன்வருகிறார்கள் என முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்புக்குமாறாக நிலைமை தலைகீழாக உள்ளது. மாநகர மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் மூலம் அன்றாட கொள்ளை நிலவரம் சேகரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் மூலம் சென்னை காவல்துறை தலைவருக்கு நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும்,  நாள்ேதாறும் 220 முதல் 365 வரை கொள்ளை வழக்குகள் பதிவாகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கை விவரம், முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு செல்கிறதா?, இல்லையா? என்பது காவல்துறை உயரதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்.எது எப்படியோ, கொள்ளை செயல்களை தடுக்க காவல்துறையினர் போதிய  முனைப்பு காட்டவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

இதன்விளைவாக, அன்றாடம் தொடர்கிறது கொள்ளை சம்பவம். சாதாரண, சாமானிய மக்கள், நம்பிக்கை வைத்திருக்கும் ஒரே இடம் நீதிமன்றம், அடுத்து காவல்துறை. இந்த இரு துறைகளை சார்ந்த அதிகாரிகள் வீட்டையே கொள்ளையர்கள் பதம் பார்க்கிறார்கள், கலங்கடிக்கின்றனர். பல இடங்களில் கொள்ளை கும்பலுடன், காவல்துறை அதிகாரிகள் கைகோர்ப்பதும் இக்குற்றச்செயல் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சட்டம் ஒழுங்கு சரிதானா? அரசு தான் கவனிக்க வேண்டும்.

cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்