SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரியான பாதை

2016-08-12@ 02:12:10

வனவிலங்குகள் - மனிதர்கள் மோதல் என்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இந்த பிரச்னை உள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாடுபட்டு விளைவித்த பயிர்கள் மற்றும் கால்நடைகள், உடைமைகள் ஆகியவை வனவிலங்குகளால் சேதம் அடைகின்றன. இதற்கு அவர்களுக்கு கிடைக்கும் நஷ்டஈடு என்பது சொற்ப அளவில்தான் உள்ளன. தென்னை மரங்கள் யானைகளால் சேதமடைந்தால், அதற்கு அதிகபட்சம் அரசிடம் இருந்து கிடைப்பது ரூ.500 மட்டுமே. ஆண்டு முழுக்க நல்ல வருமானம் தரும், தென்னை வளர்ந்து பலன் தருவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. அதுவரையில் அதற்கான பராமரிப்பு செலவே பல ஆயிரம் வருகிறது. இந்நிலையில், யானைகள் சர்வசாதாரணமாக அவற்றை அழித்துவிடுகின்றன. இதை பார்க்கும் விவசாயிகள் கண்ணில், ரத்தம்தான் வடிகின்றன.

வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதற்கு முக்கிய காரணம், தண்ணீர் மற்றும் உணவு பிரச்னைதான். வனவிலங்குகளுக்கு இவை இரண்டையும் செய்து கொடுத்துவிட்டாலே, அவை ஏன் ஊரை பார்க்க வரப்போகின்றன? இப்போதுள்ள நிலையில், காடுகள் அழிப்பு, தண்ணீர் பஞ்சம் ஆகியவற்றினால் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதை தடுக்க காடுகளில் அதிக அளவில் கால்நடைகளுக்கான செடிகள் மற்றும் மர விதைகள் தூவப்பட வேண்டும். மழைக்காலங்களில் செலவு பார்க்காமல் சிறிய வகை ஹெலிகாப்டர்கள் அல்லது ஆளில்லா விமானங்கள் மூலம் தூவ அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல், காட்டின் உள்பகுதியில் சின்ன, சின்ன குளங்களை வெட்டி வைக்க வேண்டும். இப்போது குட்டைகள் அமைக்கப்படுவதாக கூறினாலும் அது உள்புறத்தில் அமைக்கப்படுவதில்லை. விலங்குகளின் வழித்தடத்தில் அமைக்கப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் குழப்பமடைவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றன.
 
தற்போது காட்டு யானைகள் நகருக்குள் வராமல் தடுக்க, பழ மரங்கள், பயிர் வகைகள் காடுகளில் வளர்க்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது வரவேற்கப்படக் கூடியதே. ஆனால், ஒவ்வொன்றாக நடுவதன் மூலம் அவற்றை விரைவாக செய்துவிட முடியாது. இதற்கு பதிலாக வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் மழைக்காலத்துக்கு முன்னதாக, விமானங்கள் மூலம் பழ விதைகள் மற்றும் பயிர்களை தூவுவதன் மூலம் அவற்றை மிக விரைவாக பல இடங்களில் வளரச் செய்ய முடியும். எங்கிருந்து நல்ல விஷயங்கள் கிடைத்தாலும் அதை செயல்படுத்துவதே அறிவாளிகளின் செயல்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்