SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயிலுக்கு கரும்புள்ளி

2016-08-11@ 01:05:52

ஆண்டுக்கு சுமார் 500 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். 35 கோடி டன் சரக்கு நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. 14,440 தொடர் வண்டிகள் இயங்குகின்றன. 63,140 கிலோ மீட்டருக்கு பாதை கொண்டது. ஒரு நாட்டின் அரசாங்கமே தனி பட்ஜெட் போடும் அளவுக்கு பெருமை கொண்டது தான் நமது ரயில்வே துறை. ஒரே நாளில் இந்த பெருமையை காலி செய்து விட்டது சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கூரையை துளை போட்டு ரூ.5.85 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம். சேலம் வங்கிகளில் இருந்து ரூ.342 கோடி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் சென்னையில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி ரயில் ஓடும் போது பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு இறங்கி கொள்ளையடித்து தப்பினர். சினிமாவில் கூட கண்டிராத அளவுக்கு நடந்திருப்பதை உணர முடிகிறது. ரயில்களில் பயணிகளிடம் நகை பறிப்பது, பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்வது உண்டு. இதில் ஈடுபடும் கொள்ளையர்களும் போலீஸ் வலையில் சிக்கி விடுகின்றனர்.

சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்தது போன்ற நிகழ்வு இதுவரை நடந்ததில்லை என்பதால் ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகம் கூனி குறுகிப்போனது. பணம் வைத்திருந்த பெட்டி எப்படி, எங்கே, யாரால், எப்போது துளையிடப்பட்டது என்பதற்கு ஒரு சிறு தடயத்தை கூட போலீசாரால் உடனடியாக கண்டறியமுடியவில்லை. பணப்பெட்டியை ரயிலுக்கு ஏற்றிய போர்ட்டர் முதல் வழித்தட பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வரை அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். போலீசாருக்கு இந்த வழக்கு சவாலான ஒன்றுதான் என்றாலும், கொள்ளையர்களை கைது செய்வார்கள் என்று நம்புவோம். ரயில்வே நிர்வாகத்திற்கு இந்த கொள்ளை சம்பவம் ஒரு கரும்புள்ளி. ஆனால் இதன் மூலம் ஏராளமான பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில் அவர்களது பாதுகாப்பு மட்டுமின்றி, அதில் செல்லும் சொத்துகளுக்கும் பாதுகாப்பும் அவசியம். ரயில்வேக்கு வருவாய் கிடைப்பது 70 சதவீதம் சரக்கு போக்குவரத்து மூலம் தான்.

தற்போது ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணமே கொள்ளையடிக்கப்பட்டது. எந்த பாதுகாப்பும் இல்லாமல் அனுப்பி வைக்கப்படும் உணவு தானியங்கள், தனியார் அனுப்பி வைக்கும் சரக்கு பொருட்களின் பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகம் எத்தகைய உத்தரவாதத்தை அளிக்கப்போகிறது. ரயில்வே நிர்வாகத்திற்கு வருமானம் கிடைப்பதில் 10 ஆண்டுகளுக்கு முன் வரை முக்கிய பங்காற்றியது ஆர்எம்எஸ் எனப்படும் ரயில்வே மெயில் சர்வீஸ். தற்போது நவீனங்கள் பெருகி கடித போக்குவரத்து முழுமையாக குறைந்து விட்டது. அரசு துறை நிறுவனங்களில் இருந்து மட்டும் ஆவணங்கள், கடித போக்குவரத்து, அரசு போட்டி தேர்வுகளின் வினாத்தாள், விடைத்தாள்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆர்எம்எஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

அப்படி அனுப்பி வைக்கப்படும் முக்கிய பார்சல்கள் திருடு போகிறது. பல சம்பவங்களில் வழக்குகள் கூட பதியவில்லை. பார்சல் அனுப்பும் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்று தபால் துறை இயக்குநரே ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயிலில் குற்றங்கள் மலிந்து விட்டன. தொழில்நுட்ப குற்றவாளிகள் அதிகரித்து விட்டனர். பெட்டியில் கேமரா பொருத்துவதற்கு கூட ரயில்வே நிர்வாகம் யோசிப்பதில் அர்த்தமில்லை.

amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Netaji_Subhash _Chandra_Bose_Airport In Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்