SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மர்மம் விலகட்டும்

2016-08-10@ 01:57:33

தமிழக சட்டப் பேரவை தேர்தலின்போது திருப்பூர் மாவட்டத்தில் 570 கோடி ரூபாய் பணத்துடன் 3  கன்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி பிடித்தனர். இந்த  பணத்துக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பல மணிநேரம் தாமதத்துக்கு பிறகே  சொந்தம் கொண்டாடியது. இதுதொடர்பாக ஏராளமான முரண்பட்ட தகவல்களும், செய்திகளும் வெளியாகி வந்தாலும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது வழக்குப்பதிவு செய்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த மே 13ந்தேதி பிடிபட்ட லாரிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 14ந்தேதி முதல் 17ந்தேதி வரை நிறுத்தப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட லாரிகளின் டிரைவர்களிடம் ரூ.570 கோடி பணம் கொண்டு வந்ததற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

மேலும் அவர்கள் வழங்கிய ஆவணத்தில் பணம் எடுத்து வந்த லாரிகளின் பதிவு நம்பர்கள் இல்லை. லாரிகளில் வந்த ஆந்திரபிரதேச மாநில பாதுகாப்பு அதிகாரிகள் சீருடையில் இல்லை. பணம் கொண்டு செல்வதில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் பற்றி முற்றிலும் முரண்பட்ட தகவல்கள். முதற்கட்ட தகவல் அடிப்படையில் அப்போது மாநிலத்தின் நிர்வாகத்தை தனது கையில் வைத்திருந்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நிச்சயம் இந்த பணம் குறித்த முழுவிவரம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டா? இல்லையா? 18 மணி நேர இடைவெளியில் ஸ்டேட் வங்கி மற்றும் வருவாய்த்துறை பெயரில் திடீரென சில கடிதங்கள் தயாரித்து  வழங்கப்பட்டன. அந்த கடிதங்களை கொடுக்க அத்தனை மணி  நேரம் எடுத்துக்கொண்டது ஏன்?. இவ்வளவு பெரிய தொகை எடுத்துச் செல்லப்படும் போது இதுதொடர்பான கடிதங்கள் தயார் நிலையில்தானே இருந்திருக்கும்?. இதில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் அதை செய்த அதிகாரிகள் யார்,யார் என பட்டியலிட வேண்டியது சிபிஐயின் கடமை. அது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் முதல் கோவை வங்கி அதிகாரிகள் வரை நீளும் வாய்ப்பும் இருக்கிறது.

நேர்மையின் அடிப்படையில் துரித கதியில் இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்ற விருப்பம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் உண்டு. ஏனெனில் தேர்தல் நேர்மையுடன் நடைபெற்றால்தான் ஜனநாயகம் வலுப்பெறும். அதே போல் மக்கள் சேவகர்கள் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கும் நிச்சயம் வேண்டும். அவர்கள் பதில் சொல்ல வேண்டியது மக்களுக்கு மட்டும்தான்.
தற்போது ரூ.570 கோடி விவகாரம் சிபிஐ கையில். அந்த அதிகாரிகளும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உண்மை அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் பல தகவல்கள் மக்கள் மன்றத்தில் வைக்கப்படும். மர்மங்கள் விலக வேண்டும். விலகுமா என்பதுதான் இன்றைய கேள்வி?.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
plavix plavix 300 plavix plm
abortion pill procedures farsettiarte.it having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்