SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழிப்புணர்வு தேவை

2016-08-09@ 03:10:33

நாட்டின் தலைநகர் டெல்லியில் சராசரியாக தினமும் நான்கு முதல் ஒன்பது பெண்கள் வரையில் பாலியல் தொந்தரவு, பலாத்காரத்தால் பாதிக்கப்படுவதாக டெல்லி குற்ற வழக்குகள் புள்ளிவிவரத்தில் இருந்து தெரியவந்துள்ளது. கல்வி, அறிவியல், நாகரீகம் என்று அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மிகுந்த இந்த காலகட்டத்தில் இதுபோன்ற கொடூரச் செயல்களால் பெண்கள் பாதிக்கப்படுவது, அதுவும் நாட்டின் தலைநகரில் பாதிக்கப்படுவது என்பது உண்மையில் வேதனை அளிக்கக் கூடிய விஷயம். கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா பலாத்கார சம்பவத்தால் கோபமுற்ற பொதுமக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மத்திய அரசு சிறப்பு சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனாலும், இதுவரை பெண்கள் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையே போலீசாரால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

 டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இதில் வயது வரம்பின்றி சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டில் 706 பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 2,199 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த
15 ஆண்டுகளுக்கு முன் 381 ஆக பதியப்பட்டிருந்த பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 6 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மக்கள் வேலைவாய்ப்பு தேடி டெல்லியில் குடியேறுகின்றனர். குறிப்பாக டெல்லிக்கு அருகில் உ.பி., அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். பீகார், ம.பி. மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் குடியேறுகின்றனர். இதனால், டெல்லியின் மக்கள் தொகை தற்போது சுமார் 1.87 கோடியாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸ் எண்ணிக்கை இல்லை என்றுதான் கூற வேண்டும். டெல்லியில் 11 போலீஸ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 181 போலீஸ் நிலையங்கள் உள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் போலீசார் மொத்த எண்ணிக்கை 84,536. இதில் 25 சதவீதம் பேர் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பாதுகாப்புக்கு செல்கின்றனர். மற்றவர்கள்தான் பொதுமக்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. நகரில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகரில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு வருவதால், போலீஸ் துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. பாலியல் பலாத்கார வழக்குகளில் குறிப்பிட்ட கால வரம்புக்குள் வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்