SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைந்த மவுனம்

2016-08-08@ 03:24:46

சர்ச்சைக்குரிய பல்வேறு விஷயங்களில் மவுனம் காத்த பிரதமர் நரேந்திரமோடி பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறைகள் குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பசு பாதுகாப்பு என்ற பெயரில், சிலர் கடையை தொடங்கி இருக்கிறார்கள்.  அவர்கள் மீது நான் கடும் ஆத்திரத்தில் இருக்கிறேன். பசு பாதுகாப்பு என்று  கூறிக்கொண்டால், மற்றவர்களைத் துன்புறுத்தலாம் என்று அர்த்தம் அல்ல.  அவர்களில் பெரும்பாலானோர் சமூக விரோதிகள். 80 சதவிகிதம்பேர், பகலில் பசு பாதுகாப்பாளர்களாகவும், இரவு நேரத்தில் சட்டவிரோத காரியங்களில்  ஈடுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்று ஆவேசம் பொங்க டவுன்ஹால் கூட்டத்தில் மோடி உணர்ச்சி பொங்க பேசியது அரங்கில் இருந்த பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இளஞ்சிவப்பு புரட்சியில் (பசு இறைச்சி இறக்குமதி செய்து வர்த்தகம் செய்வதாக) ஈடுபடுவதாக மோடி குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சிக்குப் பிறகு பசுவை வைத்து அரசியல் செய்வது அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதற்கேற்ப,  உத்தரப்பிரதேசம்் தாத்ரியில் தொடங்கி  சமீபத்தில் குஜராத்தில் நடந்த சம்பவங்கள் வரை தலித்கள்,  சிறுபான்மையினருக்கு எதிராக பசுவின் பெயரால் நடந்த வன்முறை குறித்து மோடி வாய் திறக்கவில்லை. தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல் மோடி மவுனத்தை கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் இயல்பான சந்தேகம் எழுகிறது.
 பசு காவலர்கள் நடத்தி வரும் வன்முறை, இந்தாண்டின் இறுதியில் உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள், அடுத்தாண்டின் தொடக்கத்தில் குஜராத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்களில் எதிரொலிக்கும் என்ற அச்சமும் இந்த மவுனம் கலைப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டு கால மோடி ஆட்சியில்  செய்ததை காட்டிலும் பேசியது தான் அதிகம் என்பது எதிர்க்கட்சிகள் விமர்சனம். டவுன்ஹால் கூட்டத்திலும் பசு விசுவாசிகளை விமர்சிப்பது மட்டுமின்றி  கிராமங்கள் மேம்பாடு, ஓட்டு வங்கி அரசியல், சுற்றுலா வளர்ச்சி, வெளியுறவு  கொள்கை குறித்தும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறியுள்ளார்.நாட்டின் வளர்ச்சி, ஒட்டு மொத்த மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் இதை கூறியிருப்பாரேயானால் மோடி இன்னும் பல்வேறு விஷயங்களில் தனது மவுனத்தை கலைக்கவேண்டும். சங்பரிவார் அமைப்புக்கு எதிரான கருத்து தெரிவிப்போர்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எழுத்தாளர் கல்புர்க்கி கொல்லப்பட்டது தொடங்கி பலர் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

பா.ஜ அல்லாத கட்சிகள் ஆளும் பல்வேறு மாநில மக்களின் பிரதான பிரச்னைகள் மீது மோடியின் கவனம் திரும்பவேண்டும். குறிப்பாக காவிரி, முல்ைல பெரியாறு, பாலாறு பிரச்னைகளில் அண்டை மாநிலங்களால் தமிழகம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மோடி அறியாத விஷயமல்ல. மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு வலுத்திருக்கிறது.
 சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி மற்ற மாநில மொழிகளை பின்னுக்கு தள்ளுவதை கை விடவேண்டும். மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் நுழைவு தேர்வு என்ற பெயரில் சமூகநீதி கோட்பாட்டுக்கு வேட்டு வைக்கும் முயற்சியை தடுத்தல்,  மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இந்தி பேசாத மாநில இளைஞர்களின் நலனை உறுதி செய்தல், நதிகள் இணைப்பு, விவசாயிகள் நலனை பாதுகாத்தல் உள்ளிட்ட விஷயங்களிலும் பிரதமரின் மவுனம் கலையவேண்டும்.

cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்