SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலையுமா இரட்டை வேடம்?

2016-08-06@ 01:01:05

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே காஷ்மீர் எல்லை பிரச்னை உள்பட பல்வேறு விஷயங்களில் போதிய புரிந்துணர்வு இல்லாமல் முரண்பாடு நீடித்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளின் நட்புறவை பரஸ்பரம் வளர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதும், இரு நாட்டு எல்லை வீரர்களின் தளபதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடத்திகொண்டே தீவிரவாதத்துக்கு மறைமுகமாக பாகிஸ்தான் ஆதரவளித்து வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு நேரு, ராஜீவ்காந்தி, வாஜ்பாய், மோடி ஆகிய பிரதமர்கள் மட்டுமே அந்நாட்டுக்கு சென்று வந்துள்ளனர். என்ன நடந்தாலும், காஷ்மீர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பாகிஸ்தான் விடுவதாக இல்லை.
சமீபத்தில் காஷ்மீர் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்கான் வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அப்போது இறந்த தீவிரவாதியை தியாகி என்று பாகிஸ்தான் அறிவித்து கருப்பு தினம் கொண்டாடியது. இது இந்திய அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்பதற்கு இந்த சான்று ஒன்றே போதுமானதாக இருந்தது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த மாநாட்டு தலைவராக இருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீப், காஷ்மீரில் விடுதலைக்கான புதிய அலை உருவாகி உள்ளது என்று சர்ச்சை பேச்சை முன்வைத்தார். ஷெரீப்பின் பேச்சுக்கு சம்மட்டையடி கொடுக்கும் வகையில் பேசிய ராஜ்நாத்சிங், தீவிரவாதிகள், தீவிரவாத இயக்கத்தின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது.

அவர்களை ஆதரிக்கும் தனிநபர் மற்றும் நாடுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதம் என்றால் அதில் நல்லது, கெட்டது என்று பிரித்து பார்க்க கூடாது. தீவிரவாதிகளை தியாகிகளாக சித்தரிக்க கூடாது. தீவிரவாத சம்பவம் நிகழ்ந்த பின்னர் வெறுமனே கண்டனம் தெரிவிப்பது போதுமானது கிடையாது. தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், ஊக்குவிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று பேசினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சின் உள்ளடங்கிய உண்மைத்தன்மை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனசாட்சியை உறுத்தியது. இதையடுத்து ராஜ்நாத்சிங்கின் பேச்சை தொடர்ந்து ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.   பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரான நாடாக இருந்தால், ராஜ்நாத் சிங் பேச்சு அவர்களுக்கு உறுத்தலை ஏற்படுத் தாமல், மகிழ்ச்சியை அளித்திருக்கும். ஆனால் அவர்களது எண்ணங்கள் அவர்களது செயல்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டது.

உலக நாடுகளில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும், அதில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைகிறார்கள். அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதும், வெளியே கண்டிப்பதுமாக இரட்டை வேடம் போடுவதை பாகிஸ்தான் இனியாவது தவிர்க்க வேண்டும். தங்கள் நாட்டு வளர்ச்சி மட்டுமின்றி அண்டைநாட்டு வளர்ச்சிக்கும் ஆபத்தை விளைக்கும் இந்த தீவிரவாத போக்கை ஆதரிக்கும் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், நட்பை இதயம் முழுக்க நிரப்பி இனியாவது கைகுலுக்க வேண்டும். மாற வேண்டும் அண்டை நாடு; கலைய வேண்டும் இரட்டை வேடம்; இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கலையப்போவது உறுதி.

abortion pill procedures late term abortion pill having an abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்