SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிருடன் விளையாடலாமா?

2016-08-05@ 01:23:24

ம ழைக்காலம் தொடங்கி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் கொசுக்கள் பல்கி பெருகியுள்ளன. மழை வந்தாலே அதனுடன் மலேரியாவும் சேர்ந்து வர ஆரம்பித்துவிடும். காரணம், தேங்கி நிற்கும் தண்ணீரில் இந்நோயை பரப்பும் கொசுக்கள் வளர்வதுதான். இதற்கான தடுப்பு மருந்துகள் வீரியம் குறைந்து வருவதாக ஏற்கனவே நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தமிழக தலைநகர் சென்னையில் தரம் குறைந்த கொசு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மலேரியா தடுப்பு ஊழியர்களால் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க 10 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி கெமி பாஸ்ட் என்ற மருந்து கலக்கப்பட்டு தெளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி மருந்து கலந்தாலும், அதனால் கொசுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு வீரியம் குறைந்த தரமற்ற மருந்துதான் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

பொதுமக்களின் நலனை மேம்படுத்தத்தான் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால், அதுவே தரமற்றதாக இருந்தால், பாதிப்புகள்தான் அதிகமாகுமே தவிர பலனிருக்காது. கொசுக்கள் 5 முதல் 10 ஆண்டுகளில் தெளிக்கப்படும் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்புத் தன்மை பெற்று விடுகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அதனால் கொசு ஒழிப்பு நடவடிக்கையில், கெமி பாஸ்ட் எந்த அளவுக்கு இப்போது வீரியமாக இருக்கும் என்பதை ஆராய்ந்து அதற்கேற்றவாறு மாற்று மருந்தை வாங்குவது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

தலைநகரிலேயே இந்த நிலை என்றால், சின்னச்சின்ன நகரங்களில் சொல்லவே வேண்டியதில்லை. இன்னமும் பழைய மருந்துகளைதான் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. அதனால் கொசுக்களின் தற்போதைய வீரியத்தன்மையை ஆராய்ந்து, மருந்துகளை தெளிக்க வேண்டும். கொசு தானே என்று அலட்சியமாக இருக்காமல், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்ைப கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் மறைமுகமான சுகாதாரச் செலவுகள் குறையும். வரும்முன் காப்பது நல்லது.

sinemet go sinemet
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்