SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்சித் தாவல் தடை சட்ட வழக்கில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : சசிகலா புஷ்பா பதவி என்னவாகும்?

2016-08-03@ 15:54:36

புதுடெல்லி: கட்சித் தாவல் தடை சட்டம் குறித்த முக்கிய வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கொறடா உத்தரவை மீறினால் மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பாவின் பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பாக ஜி.விஸ்வநாதன் எம்.பி. தொடர்ந்த வழக்கில் கடந்த 1996-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கட்சி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் குறிப்பிட்ட கட்சியின் கொறடா உத்தரவை மீறினால் தகுதி இழப்பார்கள் என தீர்ப்பளித்தது.

இது அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் உள்ள தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என மேல்முறையிட்டு வழக்கு தொடரப்பட்டன. இதனிடையே கட்சி நீக்கம் செய்யப்பட்ட சமாஜ்வாதி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களான ஜெயப்பிரதா, அமர்சிங், ஆகியோர் இதே காரணத்தை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.க்கள் கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால் கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட கூடாது என்பது அவர்களின் தரப்பு  வாதம். நீண்ட நாட்களாக நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, கே.சி.பந்த் அமர்வு இது குறித்து தீரப்பு அளிக்க விரும்பவில்லை என கூறி வழக்கை முடித்து விட்டனர்.

இதையடுத்து 1996-ம் ஆண்டு தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி வந்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள எம்.பி.சசிகலா புஷ்பாவின் பதவிக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளது.

cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்