SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாமில் கலவரத்தை தூண்டியதாக போடோ எம்எல்ஏ கைது

2012-08-24@ 01:29:07

கவுகாத்தி: அசாமில் கலவரத்தை தூண்டியதாக போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.அசாமில் போடோ பழங்குடியின மக்களுக்கும் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே கோக்ரஜார் மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 80க்கும் அதிகமானோர் பலியாகினர். அருகில் உள்ள துப்ரி, சிராங் மாவட்டங்களுக்கும் கலவரம் பரவியது. 4 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக இணையதளம், எஸ்எம்எஸ் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டதால் பெங்களூர், மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இருந்துவடகிழக்கு மாநில மக்கள் வெளியேற தொடங்கினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அசாமில் கலவரத்தை தூண்டியதாக போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி எம்எல்ஏ பிரதீப் பிரம்மாவை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். இவர் கோக்ரஜார் (மேற்கு) தொகுதி

எம்எல்ஏவாக உள்ளார். அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எம்எல்ஏ கைதை கண்டித்து கோக்ரஜாரில் அவரது ஆதரவாளர்கள் ரயில் மறியலில்

ஈடுபட்டனர். பதற்றம் நிலவுவதாலும் அருகில் உள்ள துப்ரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோக்ரஜார்
மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

walgreens promo read free pharmacy discount cards
cialis cvs coupon cialis cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்