டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ்
2016-07-20@ 19:14:32

அலகாபாத்: உலகின் முதல் 10 குற்றவாளிகள் என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை அணுகினேன் என்று தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மாடுகளை வளர்ப்பது சிறைக் கைதிகளின் குற்ற மனநிலையை குறைக்கும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பு: ரகுராம் ராஜன் கருத்து
கேரள மாநிலம் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 நாட்களில் கோடிகளில் வருமானம்
இனி யார் தப்பு செய்தாலும் என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா அமைச்சரின் எச்சரிக்கை
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி: காயமடைந்தவருக்கு ரூ.50,000...பிரதமர் மோடி அறிவிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கு: வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.2,400 கோடி சொத்துகள் ஏலம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்