கல்சா கல்லூரி மாணவர் சேர்க்கையில் தலையிட ஐகோர்ட் திட்டவட்ட மறுப்பு: மனுவை திரும்ப பெற உத்தரவு
2016-07-01@ 01:20:05

புதுடெல்லி : சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்ற கல்லூரி என்பதன் அடிப்படையில் கல்சா கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதித்த ஒருநபர் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி பல்கலையின் கீழ் கல்சா கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு இந்த கல்லூரிக்கு சிறுபான்மையினர் அந்தஸ்தை பல்கலை மானியக்குழு வழங்கியது. ஆனால், சிறுபான்மை அந்தஸ்து வழங்கினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி கல்சா கல்லூரியின் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதனால் சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கியதை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஒருநபர் நீதிபதி அடங்கிய அமர்வு, தடை விதிக்க மறுத்ததோடு, சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்ற கல்லூரி என்பதன் அடிப்படையில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இருப்பினும், மீண்டும் பல்கலை ஆசிரியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் கால்சா கல்லூரியில் படிக்கும் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களின் நலன்கள் பாதிக்கும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பும் கேள்வி குறியாகும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால பெஞ்ச், வி.காமேஸ்வர் ராவ் மற்றும் ஐ.எஸ். மேதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டதால் எந்தவகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கேட்டறிந்தனர். பின்னர், “பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் எங்களிடம் வந்தபின்னர் இதுபற்றி முடிவு செய்யலாம். எனவே, இந்த மனு தற்போதைய நிலையில் விசாரணைக்கு உகந்தது அல்ல. இதனை திரும்ப பெறுங்கள். இல்லையெனில் தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவித்தனர். இதையடுத்து மனு திரும்பப் பெறப்பட்டது.
மேலும் செய்திகள்
பிப்.25- ல் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ட்விட்டர் சிஇஓ ஜாக் டார்சி மீண்டும் ஆஜராக மறுப்பு
டெல்லி அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வில் எஸ்சி பிரிவினருக்கான கட்ஆஃப் அதிகம் என தகவல்
ஹைதராபாத் பகுதியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,020 கிலோ கஞ்சா பறிமுதல்
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் : ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு