SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும் எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு

2016-06-30@ 00:16:06

புதுடெல்லி: திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை வடமாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ரிஷிகேஷில் உள்ள பூங்காவில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை நேற்று திறக்கப்பட்டது. இதை உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் திறந்து வைத்தார். திருக்குறள் மாணவர் அமைப்பு என்ற அமைப்பின் சார்பில் பாஜ மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தலைமையில், கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டு, லாரி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு எடுத்து வரப்பட்டது.
ஹரித்துவாரில் அரிக்கபேடி என்ற இடத்தில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு அப்பகுதி  மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியர் சவுக்  என்ற பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு சிலை நிறுவும் பணிகள் நடைபெற்றபோது, நேற்றிரவு அப்பகுதியில்  உள்ள இந்துமத சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் புலவருக்கு இங்கு ஏன் சிலை வைக்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களை அரசு அதிகாரிகள்  எவ்வளவோ சமாதானப்படுத்தியும் சிலை நிறுவ மறுத்துவிட்டனர்.

இதையடுத்து நீண்ட அலைகழிப்புக்குப்பின் ரிஷிகேஷில் உள்ள பொதுப்பணி துறை விருந்தினர் மாளிகையில் உள்ள பூங்காவில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. சுமார் 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை உத்தரப்பிரதேச ஆளுநர் ராம்நாயக் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், பஞ்சாப் ஆளுநர் கே.எஸ்.சோலங்கி, மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை இணையமைச்சர் செந்தில் தொண்டைமான் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்பட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தமிழ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்