SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணமானவரை காதலித்ததால் தங்கையை கொன்றார் அண்ணன்

2016-06-28@ 00:11:18

நாங்குநேரி:  திருமணமானவரை காதலித்து ஊர் சுற்றியதால் நெல்லை அருகே கல்லூரி மாணவியை அவரது அண்ணனே தீர்த்துக் கட்டியது தெரிய வந்துள்ளது.  நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மேல மூன்றடைப்பை சேர்ந்தவர் சிதம்பரம் என்ற கணேசன்(53). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி(46) மகன்கள் கிருஷ்ணராஜா(25), செல்வக்குமார்(23), மகள் மாலா(22). கிருஷ்ணராஜா சென்னை வண்ணாரபேட்டை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். செல்வக்குமார் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.  மாலா பாளையிலுள்ள கல்லூரி ஒன்றில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்.  தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார். ஆழ்வார்நேரியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பழக்கடையில்  வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பஸ்சில் வேலைக்கு சென்ற போது  சார்லசுடன்  மாலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.  இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். அவரது கடைக்கு அடிக்கடி சென்று ஜூஸ் குடித்து பேசிக்கொண்டிருப்பார். இவர்களது காதல் விவகாரம் தெரிந்து பெற்றோர் கண்டித்தனர்.  இதன் பின்னர் மாலா கல்லூரிக்கு செல்லவில்லை.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு  மேலப்பாளையத்திலுள்ள பாட்டி வீட்டுக்குச் செல்வதாக கூறிச் சென்ற மாலா பின்னர் வீடு திரும்பவில்லை. அதே நேரத்தில் சார்லசும் தலைமறைவானார். இதுகுறித்து மாலாவின் பாட்டி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். சார்லசின் குடும்பத்தினரும் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் தேடி அலைந்தனர். இறுதியாக கோவை அருகே தங்கியிருந்த இருவரையும் கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் மாலாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு அவர்  எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த   கிருஷ்ணராஜா, தனது  தங்கையை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

நேற்றுமுன்தினம் இரவு இது தொடர்பாக அவர் தங்கையிடம் பேசிய போது  மாலா பிடிவாதமாக திருமணத்துக்கு மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜா, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டார்.  படுகாயமடைந்த மாலா மருத்துவமனையில் இறந்தார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணராஜாவைத் தேடுகின்றனர்.

உறவினர்கள் தூண்டுதல்
மாலாவும், சார்லசும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் ஏற்கனவே திருமணமானவரை காதலித்ததால் மாலாவுக்கு அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக உறவுக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இந்த விவகாரம் தங்களுக்கு மானப்பிரச்னை என்றும் இதை விட்டு வைக்கக்கூடாது என்றும் கிருஷ்ணராஜாவிடம் அவரது உறவினர்கள்் உசுப்பேற்றியுள்ளனர். இதனால் வெறுப்படைந்த கிருஷ்ணராஜா ஒரே தங்கை என்றும் பார்க்காமல் மாலாவை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்